இந்திய அணி நியூஸிலாந்துக்குச் சுற்றுப்பயணம் செய்து 5 டி20, 3 ஒருநாள், 2 டெஸ்டுகளில் விளையாடுகிறது. முதல் டி20 ஆட்டம் ஆக்லாந்தில் இன்று தொடங்கியது.
டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது. ரிஷப் பந்த், சஞ்சு சாம்சன், சைனி, குல்தீப், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் இந்திய அணியில் இடம்பெறவில்லை. மணிஷ் பாண்டே, ஷர்துல் தாக்குர், ஷிவம் டுபே ஆகியோர் இந்திய அணியில் இடம்பெற்றுள்ளார்கள்.
அதிரடி பேட்ஸ்மேன்களான மார்டின் கப்திலும் காலின் மன்ரோவும் ஆரம்பம் முதல் இந்தியப் பந்துவீச்சைப் பதம் பார்த்தார்கள். அவர்களுக்கு லட்டு மாதிரி கிடைத்தார் ஷர்துல் தாக்குர். பந்துவீச்சு மட்டுமல்லாமல் பேட்டிங் திறமைக்காகவும் சைனியை ஓரங்கட்டி அணிக்குள் தேர்வான ஷர்துல் தாக்குர், பவர்பிளே-யில் வீசிய இரு ஓவர்களிலும் சேர்த்து 30 ரன்கள் கொடுத்தார். இந்தியப் பந்துவீச்சாளர்கள் வைட்களும் அவ்வப்போது கொடுத்ததால் பவர்பிளேயின் முடிவில் நியூஸிலாந்து அணி, 68 ரன்கள் எடுத்தது. இதனால் இந்த ஆட்டத்தில் அந்த அணி பெரிய ஸ்கோரை எடுக்கும் அடித்தளம் அமைக்கப்பட்டது.
கப்தில், மன்ரோ ஆகிய இருவரையும் பிரித்தது ரோஹித் சர்மாவின் அட்டகாசமான கேட்ச். எல்லைக்கோடு அருகே சிக்ஸருக்குச் செல்லவிருந்த பந்தை அருமையாகப் பிடித்தார். இதனால் 30 ரன்களில் ஷிவம் டுபேவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார் மார்டின் கப்தில்.
10 ஓவர்களில் நியூஸிலாந்து அணி 1 விக்கெட் இழப்புக்கு 89 ரன்கள் எடுத்தது.
அதிக ரன்கள் குவிக்கும் மனநிலையில் இருந்த மன்ரோ, 59 ரன்களில் தாக்குர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்த ஓவரில் கிராண்ட்ஹோம் ஜடேஜா பந்துவீச்சில் டக் அவுட் ஆனார். 15-வது ஓவரின் முடிவில் நியூஸிலாந்து அணி 3 விக்கெட் இழப்புக்கு 143 ரன்கள் எடுத்தது.
ஷமி வீசிய 16-வது ஓவரில் டெய்லர் 2 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரியும் எடுத்தார். அந்த ஓவரில் நியூஸி. அணிக்கு 22 ரன்கள் கிடைத்தன. அடுத்த ஓவரில் சஹால் 13 ரன்கள் கொடுத்தாலும் அதிரடியாக விளையாடிய வில்லியம்சனின் விக்கெட்டை வீழ்த்தினார். 26 பந்துகளில் 4 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 51 ரன்கள் எடுத்து அணிக்குப் பக்கபலமாக விளங்கினார் வில்லியம்சன்.
கடைசி மூன்று ஓவர்களில் இரண்டு ஓவர்களை பும்ரா வீசுவார் என்பதால் அதைப் பலமாக நம்பியிருந்தார் கோலி. 18-வது ஓவரில் 4 ரன்கள் மட்டும் கொடுத்து 1 ரன்னில் சைஃபெர்டை வெளியேற்றினார் பும்ரா. 19-வது ஓவரை ஷமி நன்றாக வீசி 9 ரன்கள் கொடுத்தார். கடைசி ஓவரின் 2-வது பந்தில் பும்ரா பந்துவீசி முடித்தவுடன் கீழே விழுந்து சிறிது நேரம் எழ முடியாமல் இருந்தார். இதனால் இந்திய ரசிகர்கள் பதற்றம் அடைந்தார்கள். எனினும் சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு மீண்டும் பந்துவீசினார்.
கடந்த ஆறு வருடங்களில் தனது முதல் டி20 அரை சதத்தை எடுத்தார் டெய்லர். கடைசி ஓவரில் 12 ரன்கள் கொடுத்தார் பும்ரா.
நியூஸிலாந்து அணி, 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 203 ரன்கள் குவித்தது. டெய்லர் 27 பந்துகளில் 3 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 54 ரன்களும் சான்ட்னர் 2 ரன்களும் எடுத்துக் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பரமத்தி வேலூா் ஏலச் சந்தையில் பூக்களின் விலை உயா்வு

நீட் தோ்வு: நாமக்கல் மாவட்டத்தில் 4,741 போ் எழுதுகின்றனா்

திருச்செங்கோடு வாக்கு எண்ணிக்கை மையத்தில் மூன்று அடுக்கு போலீஸ் பாதுகாப்பு: ஆட்சியா்

தொழில்துறை மின்னணு சாதனங்கள் உற்பத்தித் துறையில் களமிறங்கிய எல்&டி
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


