2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

பந்துவீச்சில் தடுமாறும் இந்திய அணி: நியூஸிலாந்து 10 ஓவர்களில் 89/1

முதல் 10 ஓவர்களில் நியூஸிலாந்து அணி 1 விக்கெட் இழப்புக்கு 89 ரன்கள் எடுத்துள்ளது...

News image
Updated On :27 ஜனவரி 2024, 3:35 pm

எழில்

இந்திய அணி நியூஸிலாந்துக்குச் சுற்றுப்பயணம் செய்து 5 டி20, 3 ஒருநாள், 2 டெஸ்டுகளில் விளையாடுகிறது. இந்திய அணி நியூஸிலாந்துக்குச் சுற்றுப்பயணம் செய்து 5 டி20, 3 ஒருநாள், 2 டெஸ்டுகளில் விளையாடுகிறது.

டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது. ரிஷப் பந்த், சஞ்சு சாம்சன், சைனி, குல்தீப், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் இந்திய அணியில் இடம்பெறவில்லை. மணிஷ் பாண்டே, ஷர்துல் தாக்குர், ஷிவம் டுபே ஆகியோர் இந்திய அணியில் இடம்பெற்றுள்ளார்கள்.

அதிரடி பேட்ஸ்மேன்களான மார்டின் கப்திலும் காலின் மன்ரோவும் ஆரம்பம் முதல் இந்தியப் பந்துவீச்சைப் பதம் பார்த்தார்கள். அவர்களுக்கு லட்டு மாதிரி கிடைத்தார் ஷர்துல் தாக்குர். பந்துவீச்சு மட்டுமல்லாமல் பேட்டிங் திறமைக்காகவும் சைனியை ஓரங்கட்டி அணிக்குள் தேர்வான ஷர்துல் தாக்குர், பவர்பிளே-யில் வீசிய இரு ஓவர்களிலும் சேர்த்து 30 ரன்கள் கொடுத்தார். இந்தியப் பந்துவீச்சாளர்கள் வைட்களும் அவ்வப்போது கொடுத்ததால் பவர்பிளேயின் முடிவில் நியூஸிலாந்து அணி, 68 ரன்கள் எடுத்தது. இதனால் இந்த ஆட்டத்தில் அந்த அணி பெரிய ஸ்கோரை எடுக்கும் அடித்தளம் அமைக்கப்பட்டது. 

கப்தில், மன்ரோ ஆகிய இருவரையும் பிரித்தது ரோஹித் சர்மாவின் அட்டகாசமான கேட்ச். எல்லைக்கோடு அருகே சிக்ஸருக்குச் செல்லவிருந்த பந்தை அருமையாகப் பிடித்தார். இதனால் 30 ரன்களில் ஷிவம் டுபேவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார் மார்டின் கப்தில். 

முதல் 10 ஓவர்களில் நியூஸிலாந்து அணி 1 விக்கெட் இழப்புக்கு 89 ரன்கள் எடுத்துள்ளது. மன்ரோ 48, வில்லியம்சன் 5 ரன்களுடன் ஆடி வருகிறார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.