பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!தலைமைத் தோ்தல் ஆணையரை நீக்கக்கோரி மாநிலங்களவையில் எதிா்க்கட்சிகள் புதிய நோட்டீஸ்டிசம்பரில் இருந்து சுங்கச் சாவடிகளில் இடையூறற்ற சேவை: நிதின் கட்கரி சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு: 6.68 லட்சம் மாணவா்கள் விண்ணப்பம்பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!
/

நியூஸிலாந்து டி20 தொடர்: ஷிகர் தவன் விலகல்!

நியூஸிலாந்துக்கு எதிரான டி20 தொடரிலிருந்து ஷிகர் தவன் விலகியுள்ளார்...

News image
Updated On :21 ஜனவரி 2020, 9:03 am

நியூஸிலாந்துக்கு இந்திய கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் செய்து 5 டி20, 3 ஒருநாள், 2 டெஸ்டுகளில் விளையாடுகிறது. முதலில் தொடங்கும் டி20 தொடர் ஜனவரி 24 முதல் ஆரம்பிக்கவுள்ளது.

இதற்காக இந்திய அணி நேற்று ஆக்லாந்துக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளது. அதில் ஷிகர் தவன் இடம்பெறவில்லை. இதையடுத்து நியூஸிலாந்துக்கு எதிரான டி20 தொடரிலிருந்து ஷிகர் தவன் விலகியுள்ளார்.

கடந்த ஞாயிறன்று, பெங்களூரில் நடைபெற்ற இந்தியா -  ஆஸ்திரேலியா இடையிலான 3-வது ஒருநாள் ஆட்டத்தில், ஃபீல்டிங் செய்தபோது ஷிகர் தவனுக்குத் தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இதனால் இந்திய அணியின் இன்னிங்ஸில் தவன் பேட்டிங் செய்ய வரவில்லை. 

இதையடுத்துக் காயம் காரணமாக டி20 தொடரிலிருந்து ஷிகர் தவன் விலகியுள்ளதால் அவருக்குப் பதிலாக எந்த வீரரைத் தேர்வுக்குழுவினர் தேர்வு செய்வார்கள் என்கிற ஆர்வம் எழுந்துள்ளது. இந்திய ஏ அணி நியூஸிலாந்துக்குத் தற்போது சுற்றுப்பயணம் செய்து வருகிறது. அந்த  அணியில் இடம்பெற்றுள்ள சஞ்சு சாம்சன், மயங்க் அகர்வால், பிரித்வி ஷா ஆகிய மூவரிலிருந்து ஒருவர் தேர்வு செய்யப்படுவார் எனத் தெரிகிறது.      

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.