தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

கோலி நன்றாக விளையாடி விடக்கூடாது என்பதற்காகத்தான் அவரை வம்பிழுக்கவில்லை: ஆஸி. கேப்டன் விளக்கம்

கோடிக்கணக்கில் சம்பளம் கிடைக்கும் ஐபிஎல் ஒப்பந்தத்துக்காக தற்போதைய ஆஸி. வீரர்கள் இந்திய கேப்டன் விராட் கோலியுடன்..

News image
Updated On :10 ஏப்ரல் 2020, 11:37 am

கோடிக்கணக்கில் சம்பளம் கிடைக்கும் ஐபிஎல் ஒப்பந்தத்துக்காக தற்போதைய ஆஸி. வீரர்கள் இந்திய கேப்டன் விராட் கோலியுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவதில்லை என்று ஆஸி. முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் குற்றம் சாட்டினார். அதற்கு ஆஸி. டெஸ்ட் கேப்டன் டிம் பெயின் பதில் அளித்துள்ளார்.

ஒரு பேட்டியில் அவர் கூறியதாவது:

ஆஸ்திரேலியாவில் இந்தியாவுக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் தொடரில் இந்திய கேப்டன் விராட் கோலியுடன் நல்லவிதமாக நடந்துகொண்ட ஆஸி. வீரர்கள் யாரையும் நான் பார்க்கவில்லை. அப்படி எதுவும் நடக்கவில்லை. பேட்டிங், பந்துவீச்சில் ஈடுபட்ட அனைவரும் ஆஸி. அணியின் வெற்றிக்காகவே உழைத்தார்கள். மற்றபடி கோலியிடம் யார் நட்பு பாராட்டினார்கள் என்று தெரியவில்லை. ஆனால் ஒன்று அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபடக்கூடாது என்று மட்டும் முடிவெடுத்தோம். ஏனெனில் அப்படி நடந்தால் அதன்மூலம் சிறப்பாக விளையாட ஆரம்பிப்பார் கோலி.

அந்தத் தொடரில் பரபரப்பான தருணங்கள் பல இருந்தன. நாங்கள் யாரும் எதிலும் பின்வாங்கவில்லை. விராட் கோலிக்குப் பந்துவீசும்போது யாரும் ஐபிஎல் ஒப்பந்தத்தை எண்ணிப் பார்ப்பதில்லை என்று கூறியுள்ளார்.

சில நாள்களுக்கு முன்பு, ஒரு பேட்டியில் முன்னாள் கேப்டன் கிளார்க் கூறியதாவது:

வருமானத்தின் அடிப்படையில் சர்வதேச அளவிலும் உள்ளூரில் ஐபிஎல் அளவிலும் இந்திய அணி எந்தளவுக்குச் சக்திமிக்கது என்பதை அனைவரும் அறிவோம். ஆஸ்திரேலியாவும் இதர நாடுகளும் குறிப்பிட்ட காலத்தில் இந்திய அணிக்குப் பிடித்தது போல நடந்துகொண்டார்கள். கோலி மற்றும் இந்திய அணி வீரர்களுக்கு எதிராக களத்தில் வாக்குவாதம் செய்ய அஞ்சினார்கள். காரணம், அவர்களுடன் இணைந்துதான் ஐபிஎல்-லில் விளையாட வேண்டும் அல்லவா!

சிறந்த ஆஸ்திரேலிய வீரர்களை ஐபிஎல் அணிக்குத் தேர்வு செய்கிறார்கள். எனவே வீரர்களும், நான் கோலியுடன் வாக்குவாதம் செய்யப்போவதில்லை. அப்போதுதான் அவர் என்னை பெங்களூர் அணிக்கு ஆறு வாரக் காலத்துக்கு 1 மில்லியன் டாலருக்குத் தேர்வு செய்வார் என நினைக்கிறார்கள் என்று கிளார்க் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.