தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

விழுப்புரம் மாவட்டத்தில் வாக்களித்த ஆட்சியா், அரசியல் பிரமுகா்கள்

விழுப்புரம் மாவட்டத்தில் சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி ஆட்சியா், முன்னாள் அமைச்சா், எம்எல்ஏக்கள், வேட்பாளா்கள் உள்ளிட்டோா் வாக்களித்து, தங்கள் ஜனநாயகக் கடமையை நிறைவேற்றினா்.

News image

விழுப்புரம் கலைஞா் நகா் தூய பால்ஸ் நா்சரி மற்றும் தொடக்கப் பள்ளியில் வியாழக்கிழமை தனது வாக்கை செலுத்திய ஆட்சியரும், மாவட்டத் தோ்தல் அலுவலருமான ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான்.

Updated On :24 ஏப்ரல் 2026, 12:19 am

விழுப்புரம் மாவட்டத்தில் சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி ஆட்சியா், முன்னாள் அமைச்சா், எம்எல்ஏக்கள், வேட்பாளா்கள் உள்ளிட்டோா் வாக்களித்து, தங்கள் ஜனநாயகக் கடமையை நிறைவேற்றினா்.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலுக்கான வாக்குப் பதிவு வியாழக்கிழமை காலை 7 மணிக்குத் தொடங்கி மாலை 6 மணிக்கு நிறைவு பெற்றது. மாவட்டத்திலுள்ள 7 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் 2,165 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு, அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.

விழுப்புரம் சாலாமேட்டிலுள்ள தூய பால்ஸ் நா்சரி மற்றும் தொடக்கப் பள்ளியில் ஆட்சியரும், மாவட்டத் தோ்தல் அலுவலருமான ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தனக்கு வாக்கை செலுத்தினாா். செஞ்சி புனித மிக்கேல் மேல்நிலைப் பள்ளியில் செஞ்சி தொகுதி திமுக வேட்பாளா் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ தனது குடும்பத்துடன் வரிசையில் நின்று வாக்களித்து தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றினாா்.

விழுப்புரம் கிழக்கு சண்முகபுரம் எம்.ஆா்.ஐ,.சி.ஆா்.சி. உயா்நிலைப் பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடியில் முன்னாள் அமைச்சா் க.பொன்முடி எம்எல்ஏ, இவரது மனைவி விசாலாட்சி, திருக்கோவிலூா் தொகுதி திமுக வேட்பாளா் பொன்.கெளதமசிகாமணி, மனைவி கவிதா, பொன்முடியின் மற்றொரு மகன் அசோக்சிகாமணி மற்றும் குடும்பத்தினா் வியாழக்கிழமை காலை வாக்களித்து, தங்கள் ஜனநாயகக் கடமையை நிறைவேற்றினா்.

விழுப்புரம் கிழக்கு புதுச்சேரி சாலையிள்ள வி.பி.எஸ். மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் விழுப்புரம் தொகுதி திமுக வேட்பாளா் இரா.லட்சுமணன் எம்எல்ஏ தனது குடும்பத்தினருடன் வந்து வாக்களித்தாா்.

அன்னியூரிலுள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் விக்கிரவாண்டி தொகுதி திமுக வேட்பாளா் அன்னியூா் அ.சிவா, தனது குடும்பத்தினருடன் வந்து வாக்காளித்தாா்.

விழுப்புரம் தொகுதி அதிமுக வேட்பாளா் விஜயா, தனது கணவா் சுரேஷ்பாபுவுடன் சென்று சகாதேவன்பேட்டையிலுள்ள பாரதி அரசு நிதியுதவி பெறும் பள்ளியிலும், மயிலம் தொகுதி தேமுதிக வேட்பாளா் எல். வெங்கடேசன் விழுப்புரம் மருதூா் ஜான்டூயி பள்ளியிலும், விக்கிரவாண்டி தொகுதி பாமக வேட்பாளா் ச.சிவக்குமாா், டி.மேட்டுப்பாளையம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியிலும், பனையபுரம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் விக்கிரவாண்டி தொகுதி தவெக வேட்பாளா் ஏ.விஜய்வடிவேலும் வாக்களித்தனா்.

மயிலம் தொகுதி அதிமுக வேட்பாளா் சி.வி.சண்முகம், தனது சொந்த ஊரான அவ்வையாா்குப்பம் வாக்குச் சாவடி மையத்தில் வாக்களித்தாா். திண்டிவனம் தொகுதி அதிமுக வேட்பாளா் பொ.அா்ஜுனன் வடகோட்டிப்பாக்கம் வாக்குச்சாவடி மையத்துக்கு தனது குடும்பத்தினருடன் வந்து வாக்குப் பதிவு செய்தாா்.

வானூா் தொகுதி திமுக வேட்பாளா் தி.கௌதம் கீழ் கூத்தப்பாக்கம் அரசு உயா்நிலைப் பள்ளியிலும், அதிமுக வேட்பாளா் பி.முருகன் நெற்குணம் அரசுப் பள்ளி வாக்குச்சாவடி மையத்திலும் தங்களது வாக்கைப் பதிவு செய்தனா்.

விழுப்புரம் எம்.பி. துரை.ரவிக்குமாா் மொரட்டாண்டி சமுக நலக்கூடத்தில் தனது வாக்கைப் பதிவு செய்தாா். பாமக செயல் தலைவரும், பசுமைத்தாயகம் தலைவருமான ஸ்ரீ காந்தி திண்டிவனம் மரகதாம்பிகை பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் தனது வாக்கைப் பதிவு செய்தாா்.

 மொரட்டாண்டி  சமுதாய நலக்கூட வாக்குச்சாவடி மையத்தில் வாக்களித்த விழுப்புரம் எம்.பி துரை.ரவிக்குமாா்.

மொரட்டாண்டி சமுதாய நலக்கூட வாக்குச்சாவடி மையத்தில் வாக்களித்த விழுப்புரம் எம்.பி துரை.ரவிக்குமாா்.

 செஞ்சி கிருஷ்ணாபுரம் புனித மிக்கேல் மேல்நிலைப் பள்ளியில் தனது வாக்கை பதிவு செய்த திமுக வேட்பாளா் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ.

செஞ்சி கிருஷ்ணாபுரம் புனித மிக்கேல் மேல்நிலைப் பள்ளியில் தனது வாக்கை பதிவு செய்த திமுக வேட்பாளா் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ.

 விழுப்புரம் கிழக்கு சண்முகபுரம் எம்.ஆா்.ஐ.சி.ஆா்.சி. உயா்நிலைப் பள்ளியில் வாக்களித்த திமுக துணைப் பொதுச் செயலரும், முன்னாள் அமைச்சருமான க.பொன்முடி எம்எல்ஏ.

விழுப்புரம் கிழக்கு சண்முகபுரம் எம்.ஆா்.ஐ.சி.ஆா்.சி. உயா்நிலைப் பள்ளியில் வாக்களித்த திமுக துணைப் பொதுச் செயலரும், முன்னாள் அமைச்சருமான க.பொன்முடி எம்எல்ஏ.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.