மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் தர்மசாலாவில் நாளை தொடங்குகிறது. முழு உற்சாகத்துடன் காணப்படும் கேப்டன் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி அடுத்து தென்னாப்பிரிக்க அணியுடன் 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் மோதுகிறது.
இந்நிலையில் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு வேகப்பந்துவீச்சாளர் தீபக் சஹார் பேட்டியளித்ததாவது:
புணே சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் வலைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது என்னுடைய பேட்டிங் தோனியை ஈர்த்தது. அதன்பிறகு பந்துவீசுவதைப் பார்த்து அவருக்கு என்னை மேலும் பிடித்துப்போனது. அணியின் கேப்டனாக இருந்ததால் என்னை விளையாட வைக்கவேண்டும் என்பதில் அவர் ஆர்வமாக இருந்தார். ஆனால் காயங்கள் காரணமாக என்னால் விளையாடமுடியாமல் போனது. அடுத்த வருடம் புணே அணியின் கேப்டனாக ஸ்மித் இருந்தார். அவர் மற்ற வீரர்களுக்கு வாய்ப்பளித்தார். எனவே எனக்குப் போதுமான வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
ஐபிஎல் 2017 இறுதிச்சுற்றில், மும்பையிடம் புணே அணி தோற்ற பிறகு, நான் தோனியிடம் சென்று அறிவுரை கேட்டேன், நான் எவ்வாறு என்னை மேம்படுத்துவது என. அதற்கு அவர் சொன்னார் - அடுத்த வருடம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடத் தயாராக இரு என்றார். 2018, 2019 ஐபிஎல் போட்டிகளுக்குப் பிறகுதான் எல்லோரும் என்னைக் கவனிக்க ஆரம்பித்துள்ளார்கள்.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் முக்கியமான இந்திய வேகப்பந்துவீச்சாளர்கள் விளையாடவில்லை. இதனால் எனக்கு அழுத்தம் ஏற்படவில்லை. சிஎஸ்கே அணிக்காக விளையாடியபோது வேகப்பந்துவீச்சுக்குத் தலைமை வகித்தேன். பவர்பிளேயில் அதிக ஓவர்கள் வீசினேன். எனவே என்னால் நன்றாக விளையாட முடியும் என நம்பிக்கை உள்ளது என்று கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆண்டிமடம் அருகே சுமை ஆட்டோ தீப்பிடித்து விபத்து ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசம்

உணவகத்தில் அராஜகம்: சிறுவன் உள்ளிட்ட இருவா் கைது

காரைக்கால் அருகே மீனவா் தற்கொலை

மாடியிலிருந்து தவறி விழுந்த முதியவா் உயிரிழப்பு
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை


