தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக ஒருநாள் தொடரை இந்திய மகளிர் அணி வென்றதற்கு சச்சின் டெண்டுல்கர் ட்விட்டரில் பாராட்டு தெரிவித்திருந்தார். இதற்குப் பதிலளித்த மிதாலி ராஜ், என் வாழ்க்கையில் வியந்து பார்த்த ஒருவரிடமிருந்து பாராட்டு பெறுவது மகிழ்ச்சி. நன்றி சாம்பியன் என ஆங்கிலத்தில் ட்வீட் செய்தார். இதற்கு எதிர்வினையாற்றிய ரசிகர் ஒருவர், மிதாலிக்குத் தமிழ் தெரியாது, அவர் ஆங்கிலம், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் பேசுவார் என்றார்.
இதனால் கடுப்பான மிதாலி தனது அடுத்த ட்வீட்டை தமிழிலேயே வெளியிட்டார். தமிழ் என் தாய் மொழி... நான் தமிழ் நன்றாக பேசுவேன்... தமிழனாக வாழ்வது எனக்குப் பெருமை என்று தமிழில் எழுதினார். பிறகு ஆங்கிலத்தில் அவர் கூறியதாவது: ஆனால், அதைவிடவும் பெருமைக்குரிய இந்தியன் நான். என்னுடைய ஒவ்வொரு பதிவையும் விமரிசிக்கும் ரசிகரே, நான் தினமும் என்ன செய்யவேண்டும் என்று நீங்கள் எனக்கு அறிவுறுத்துவதுதான் என்னைத் தொடர்ந்து இயங்க வைக்கிறது என்றார்.
36 வயதாகும் மிதாலி ராஜ், இந்தியாவுக்காக 10 டெஸ்ட் போட்டிகள், 89 டி20 ஆட்டங்களிலும் விளையாடியுள்ளாா். கடந்த மாதம் டி20 ஆட்டங்களிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தாா். சா்வதேச கிரிக்கெட்டில் 20 ஆண்டுகளை கடந்த முதல் வீராங்கனை என்ற சாதனையைச் சமீபத்தில் படைத்தாா். கடந்த 1999-ஆம் ஆண்டு ஜூன் 26-ஆம் தேதி அயா்லாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் ஆட்டத்தில் அறிமுகமானாா் மிதாலி ராஜ். இதுவரை 204 ஆட்டங்களில் விளையாடியுள்ள ஒரே இந்திய வீராங்கனையும் மிதாலி ராஜ் மட்டுமே.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தாரமங்கலம் முன்னாள் எம்.எல்.ஏ பெ.கண்ணையன் காலமானார்: அன்புமணி இரங்கல்
விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி!

உங்கள் முன் ஆஜராக முடியாது! நீதிபதிக்கே கடிதம் எழுதிய கேஜரிவால்!

தஞ்சையில் பக்தர்களுக்கு நீர்மோர் வழங்கி மத நல்லிணக்கத்தைப் பறைசாற்றும் கிறிஸ்தவர்கள்- இஸ்லாமியர்கள்!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


