ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

நீ நீயாக இரு: விராட் கோலி உருக்கமான பதிவு!

ஒன்றைப் புரிந்துகொள் - நம் குடும்பத்தினர் மட்டுமே நம் மீது எல்லையில்லா அன்பை வெளிப்படுத்துவார்கள்...

News image
Updated On :5 நவம்பர் 2019, 7:18 am

இன்று இந்திய கேப்டன் விராட் கோலியின் 31-வது பிறந்தநாள். இதையொட்டி அவர் தன்னுடைய இள வயது கோலிக்குப் பதிவொன்றை எழுதியுள்ளார். 15 வயது சிக்கு-வுக்கு (விராட் கோலியின் செல்லப் பெயர்) அவர் எழுதிய பதிவில் கூறியதாவது:

முதலில் உனக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள். உன் எதிர்காலம் குறித்து என்னிடம் கேட்கவேண்டிய கேள்விகள் நிறைய உள்ளன என எனக்குத் தெரியும். என்னை மன்னித்து விடு. பல கேள்விகளுக்கு நான் பதில் அளிக்கப்போவதில்லை. அடுத்து என்ன நடக்கப் போவது என்பது தெரியாமல் இருக்கும்போது ஒவ்வொரு சவாலில் இருந்தும் ஒவ்வொரு தோல்வியிலிருந்தும் நிறைய கற்றுக்கொள்ள முடியும். இதை உன்னால் புரிந்துகொள்ள முடியாது. ஆனால், சேருமிடத்தை விடவும் பயணமே முக்கியம். மற்றும் அந்தப் பயணம் அபாரம். 

விராட், வாழ்க்கையில் உனக்கு அபார விஷயங்கள் காத்திருக்கின்றன. உன் வழியில் வரும் வாய்ப்புகளை ஏற்றுக்கொள்ள நீ தயாராக இருக்கவேண்டும். உனக்குக் கிடைக்கும் எதையும் அலட்சியமாக எண்ணாதே. எல்லோரையும் போல நீயும் தோல்வியடைவாய். ஒவ்வொரு தோல்வியிலிருந்தும் எழுவேன் என உறுதி கொள். முதல் முறை முடியாமல் போனாலும் தொடர்ந்து முயற்சி செய். 

உன்னைப் பலர் விரும்புவார்கள், பலர் வெறுப்பார்கள். உன்னைப் பற்றித் தெரியாதவர்களும் வெறுப்பார்கள். அவர்களைக் கணக்கில் எடுத்துக்கொள்ளாதே. உன் மீது நம்பிக்கை வை. 

உன் பிறந்தநாளுக்குத் தந்தை பரிசளிக்காத ஷூவைப் பற்றி எண்ணிக் கொண்டிருப்பாய் என எனக்குத் தெரியும். உன் உயரம் குறித்து அவர் அடித்த நகைச்சுவை, இன்று காலை உன்னைக் கட்டிப் பிடித்தது ஆகியவற்றுக்கு முன்னால் இதெல்லாம் ஒன்றுமில்லை. இதைக் கொண்டாடு. சில நேரங்களில் அவர் கண்டிப்பாக இருப்பார் என எனக்குத் தெரியும். ஏனெனில் அவர் உன்னிடமிருந்து சிறந்த செயல்களையே விரும்புகிறார். நம் பெற்றோர் நம்மைச் சில நேரங்களில் புரிந்துகொள்வதில்லை என நீ எண்ணுவாய். ஒன்றைப் புரிந்துகொள் - நம் குடும்பத்தினர் மட்டுமே நம் மீது எல்லையில்லா அன்பை வெளிப்படுத்துவார்கள். அவர்களை நீயும் விரும்பு. மரியாதை கொடு. உன் நேரத்தை அவர்களுடன் செலவிடு. உன் தந்தையிடம் நீ அவரை விரும்புவதாகக் கூறு. இன்னும் அதிகமாக என்று. இன்று இதைச் சொல். நாளையும் சொல். அடிக்கடி சொல். 

கடைசியாக, உன் மனம் என்ன சொல்கிறதோ அதற்கேற்றபடி உன் கனவை நோக்கிச் செல். அன்பாக இரு. பெரிதாகக் கனவு காண்பது எத்தகைய மாற்றங்களை உருவாக்கும் என்பதை உலகுக்குத் தெரியப்படுத்து. நீ நீயாக இரு. 

அந்தப் பரோட்டாக்களை அனுபவித்துச் சாப்பிடு. வருங்காலங்களில் அது பெரிய விஷயமாக இருக்கும். 

விராத்

ஒவ்வொரு நாளையும் சிறப்பாக்கு. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.