20 ஓவர்களில் 181 ரன்கள் எடுக்க வேண்டும். கடினமான இலக்கு தான். ஆனால் 10-வது ஓவரின் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 90 ரன்கள், 14.5 ஓவரின்போது 2 விக்கெட் இழப்புக்கு 139 ரன்கள் என வலுவான நிலையில் இருந்தது இங்கிலாந்து அணி. ஆனால் அந்த இடத்திலிருந்து ஆரம்பித்தது சரிவு. மனம் தளராமல் கடைசி வரைப் போராடி தூரத்தில் இருந்த வெற்றியைத் தனதாக்கிக் கொண்டுள்ளது நியூஸிலாந்து அணி.
நெல்சனில் நடைபெற்ற 3-வது டி20 ஆட்டத்தில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. நல்ல முடிவு தான் என நினைக்கும் விதத்தில் அபாரமாக விளையாடினார்கள் நியூஸி. பேட்ஸ்மேன்கள். கப்தில் 17 பந்துகளில் 33 ரன்கள் எடுத்தார். கிராண்ட்ஹோம் 35 பந்துகளில் 55 ரன்கள் எடுத்தார். முதல் 10 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 84 ரன்கள் எடுத்து அடுத்தப் பகுதியில் இன்னும் சிறப்பாக விளையாடியது நியூஸிலாந்து. அந்த அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் எடுத்தது.
இங்கிலாந்து அணி முதல் 6 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 46 ரன்கள் எடுத்தது. 10-வது ஓவரின் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 90 ரன்கள், 14.5 ஓவரின்போது 2 விக்கெட் இழப்புக்கு 139 ரன்கள் என வெற்றியை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது இங்கிலாந்து அணி. ஆனால், மாலன் 55 ரன்களிலும் மார்கன் 18 ரன்களிலும் ஆட்டமிழந்த பிறகு தடுமாற ஆரம்பித்தது. ஒரு கட்டத்தில் 18 பந்துகளில் 5 விக்கெட்டுகளைக் கடகடவென இழந்தது இங்கிலாந்து அணி. இதனால் கடைசி 12 பந்துகளில் 31 ரன்கள் என்கிற இலக்கையும் அந்த அணியால் நிறைவேற்ற முடியவில்லை. இங்கிலாந்து அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் எடுத்தது. மனம் தளராமல் போராடி, அட்டகாசமாகப் பந்துவீசி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்துள்ளது நியூஸிலாந்து அணி. இதன்மூலம், அந்த அணி 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் 2-1 என முன்னிலை பெற்றுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நாம் தமிழா் கட்சிக் கொடி அவமதிப்பு: கடலூா் எஸ்.பி.யிடம் புகாா்

ஈரோடு ரயில் நிலையத்தில் 80 கஞ்சா சாக்லேட்டுகள் பறிமுதல்

உயிரிழந்த மீனவா் குடும்பத்துக்கு மீனவ சங்கம் நிதியுதவி

பழனியில் குழந்தைகளின் ஓவியக் கண்காட்சி
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


