2020 ஐபிஎல் போட்டியில் புதிய நடைமுறை ஒன்றை அறிமுகப்படுத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.
பவர் பிளேயர்!
எனில், கால்பந்துப் போட்டிகளில் உள்ளது போல மாற்று வீரரைக் களமிறக்கும் திட்டம் இது. பவர் பிளேயர் என்கிற இந்த வீரர் ஆட்டத்தில் விக்கெட் விழும்போதே அல்லது ஒரு ஓவர் முடிந்த பிறகோ களத்துக்குள் நுழைந்து விளையாடுவார்.
அதாவது அணியில் இடம்பெறாத வீரர், ஆனால் ஆட்டத்தின் சூழலில் தேவைப்படுகிற நிலை வரும்போது களத்துக்குள் நுழைந்து விளையாட அனுமதி அளிக்கப்படும்.
உதாரணத்துக்கு, 20 ஓவர்கள் விளையாட முடியாது என்கிற காரணத்துக்காக ஆண்ட்ரே ரஸ்ஸலோ ஜஸ்ப்ரித் பும்ராவோ அன்றைய ஆட்டத்தில் விளையாடவில்லை. ஆனால், கடைசி ஓவரில் 20 ரன்கள் எடுக்க வேண்டிய நிலைமை. கொல்கத்தா அணியில் ரஸ்ஸலை விடவும் இந்தச் சூழலுக்குப் பொருத்தமான வேறொரு நபர் இருக்கமுடியுமா? இந்நிலையில் புதிய விதிமுறைகளின்படி, பவர் பிளேயராகக் களமிறங்க ரஸ்ஸலுக்கு அனுமதி அளிக்கப்படும். 6 பந்துகளுக்கு விளையாடுவது என்பது பெரிய சிரமம் கிடையாது. எனவே ரஸ்ஸல் அந்த 6 பந்துகளுக்கு மட்டும் விளையாட வரலாம், பவர் பிளேயர் என்கிற அடையாளத்துடன்.
பந்துவீச்சிலும் அப்படித்தான். காயம் காரணமாக மும்பை அணி வீரர் பும்ரா, ஓய்வில் இருப்பார். ஆனால் மும்பை அணி பந்துவீசுகிறபோது கடைசி ஓவரில் 6 ரன்களைத் தடுக்கவேண்டும். கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு பும்ராவை விடவும் வேறு யார் அத்தருணத்தில் பொருத்தமாக இருப்பார்? பும்ராவும் ஒரு ஓவர் மட்டும் வீச வேண்டும் என்பதால் தாராளமாக விளையாட வரலாம். பவர் பிளேயர் என்கிற அடையாளத்துடன் உள்ளே நுழைந்து விளையாடலாம்.
பவர் பிளேயரை அறிமுகம் செய்வதன் மூலம் ஐபிஎல் ஆட்டத்தில் கூடுதல் பரபரப்பை உண்டாக்க முடியும் என பிசிசிஐயும் ஐபிஎல் நிர்வாகமும் கருதுகிறது.
மும்பையில் நாளை ஐபிஎல் நிர்வாகக் கூட்டம் நடைபெறவுள்ளது. அதில், பவர் பிளேயர் விதிமுறை குறித்து விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது. மேலும் அடுத்த வருட ஐபிஎல் போட்டியை ரசிகர்களுக்கு ஏற்றவாறு எப்படி மாற்றியமைக்க வேண்டும் என்பது குறித்தும் ஆலோசிக்கப்படவுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
பொறுப்பால் உயரும் பெருமை!

சென்னையில் சொத்து வரி செலுத்தாத 2 லட்சம் பேருக்கு விளக்க நோட்டீஸ்! தோ்தலுக்குப் பின் தீவிர நடவடிக்கை!

இந்தியா பன்முக கலாசார தேசம் என்பது தவறானது: ஆளுநா் ஆா்.வி.ஆா்லேகா்
‘டேட்டிங்’ செயலி மூலம் தொடா்புகொண்ட லாரி ஓட்டுநரை மிரட்டி ரூ.50 ஆயிரம் பறிப்பு
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


