ஆஷஸ் 3-வது டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 52.1 ஓவர்களில் 179 ரன்களுக்குச் சுருண்டது.
ஆஷஸ் டெஸ்ட் தொடரின் மூன்றாவது டெஸ்ட் ஆட்டம் நேற்று லீட்ஸில் தொடங்கியது. ஆஸ்திரேலிய அணி 1-0 என முன்னணியில் உள்ளது.
டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. தொடக்க வீரர் வார்னர், லபுசான் ஆகிய இருவரைத் தவிர இதர வீரர்கள் அனைவரும் வந்த வேகத்தில் பெவிலியனுக்குத் திரும்பினார்கள். வார்னர் 61 ரன்களும் லபுசான் 74 ரன்களும் எடுத்தார்கள். ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 52.1 ஓவர்களில் 179 ரன்களுக்குச் சுருண்டது. இந்த டெஸ்டிலும் இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ஆர்ச்சர் அற்புதமாகப் பந்துவீசி 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பிராடுக்கு 2 விக்கெட்டுகள் கிடைத்தன. மழை காரணமாக நேற்று குறைவான ஓவர்களே வீசப்பட்டன. இதனால் இங்கிலாந்து அணியால் 2-வது இன்னிங்ஸை நேற்று தொடங்கமுடியவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தனித்த ஆளாக ஆட்சியைக் கைப்பற்றும் வலிமையை விஜய் பெறவில்லை: திருமாவளவன்

மே மாத எண்கணித பலன்கள் – 1

வணிக சிலிண்டர் விலை உயர்வு: வைகோ கண்டனம்

நாடாளுமன்றத்தின் பொதுக் கணக்குக் குழுவின் தலைவராக மீண்டும் கே.சி. வேணுகோபால்!
வீடியோக்கள்

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை


