மணிப்பூரில் உக்ருல் மாவட்டத்தில் பயங்கரவாதிகளின் 23 சட்டவிரோத பதுங்கு குழிகளை அழித்ததோடு, தெங்னௌபால் மாவட்டத்தில் 18 வெடிகுண்டுகளை பாதுகாப்புப் படையினர் பறிமுதல் செய்தனர்.
லிட்டன் காவல் நிலையப் பகுதியில் உள்ள மலை கிராமங்களான மோங்கோட் செபு, ஷோங்பெல், முல்லம், சிராராகோங் மற்றும் ரிங்கு ஆகிய பகுதிகளில் இருந்த இந்தப் பதுங்கு குழிகள் வியாழக்கிழமை (ஏப்ரல் 30) கண்டறியப்பட்டு அழிக்கப்பட்டன. மேலும், அங்கிருந்து துப்பாக்கி மற்றும் தோட்டா போன்ற பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதனிடையே, புதன்கிழமை (ஏப்ரல் 29) அன்று நடைபெற்ற தேடுதல் பணியில், தெங்னௌபால் மாவட்டத்தில் ஆயுதங்கள் மற்றும் வெடிபொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த இடத்தை பாதுகாப்புப் படையினர் கைப்பற்றினர்.
மணிப்பூரில் நிலவி வரும் இன மோதல்களுக்கு மத்தியில், வன்முறையைக் கட்டுப்படுத்தவும் அமைதியை நிலைநிறுத்தவும் பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து இதுபோன்ற தேடுதல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த ஆண்டு பிப்ரவரியில் உக்ருல் மாவட்டத்தில் உள்ள டாங்குல் நாகா மற்றும் குகி சமூகத்தினரிடையே வன்முறை வெடித்தது. இதில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் சுமார் ஏழு பேர் சுட்டுக் கொல்லப்பட்டதோடு 30-க்கும் மேற்பட்ட வீடுகள் எரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Summary
In Manipur, security forces destroyed 23 illegal bunkers belonging to terrorists in the Ukhrul district and seized 18 bombs in the Tengnoupal district.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
மணிப்பூரில் துப்பாக்கிச்சூடு: 3 இளைஞர்கள் காயம்
மணிப்பூரில் இருந்து 132 என்சிசி மாணவர்களை மீட்ட இந்திய விமானப் படை!

மணிப்பூா்: பிணைக் கைதிகளை விடுவிக்க பேச்சுவாா்த்தை தீவிரம்

குகி, நாகா சமூகங்களைச் சேர்ந்த 38 பேர் சிறைப்பிடிப்பு! - மணிப்பூர் அரசு அறிவிப்பு!
விடியோக்கள்

Podcast | சட்டப்பேரவையில் காரசாரம்: என்ன பேசப்போகிறார் முதல்வர் விஜய்? | News and Views | Episode 46

தேசிய கீதம் ஏன் இருமுறை பாடப்பட்டன?: எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கேள்வி!

ஹாலிவுட்டில் பயிற்சி: விஜய்யின் அறியாத பக்கங்கள்! | Actor Vijay |





