1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு
எடுக்கும் காரியங்களை பூரண திருப்தியுடன் செய்து முடிக்கும் திறன் உடைய ஒன்றாம் எண் அன்பர்களே இந்த மாதம் கவுரவ பிரச்சனை உண்டாகும். நீங்கள் நல்லதாக பேசினாலும் எதிரில் உள்ளவர்கள் அதை தவறான கண்ணோட்டத்துடனேயே பார்ப்பார்கள். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கும்.
கணவன், மனைவிக்கிடையே இருந்த மன வருத்தம் நீங்கும். குழந்தைகளின் எதிர்காலத்திற்கான திட்டங்களை செயல்படுத்துவீர்கள். புதிதாக வீடு - மனை வாங்குவதற்கான வேலைகளைத் தொடங்குவீர்கள். தொழில் வியாபாரத்தில் முன்னேற்ற வாய்ப்புகள் எதிரில் வந்து தோன்றும். வியாபாரம் தொடர்பான செலவு வார இறுதியில் கூடும்.
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலகம் தொடர்பான பயணம் செல்ல வேண்டி இருக்கலாம். உங்களுக்கு நற்பெயர் கிடைப்பதில் எந்த இடையூறும் இருக்காது. பெண்களுக்கு திடீர் செலவு உண்டாகலாம். காரியங்களில் தடை தாமதம் ஏற்படலாம். மாணவர்களுக்கு கல்வி பற்றிய சிந்தனை அதிகரிக்கும்.
பரிகாரம்: பைரவர் வழிபாடு காரியத் தடைகளை விலக்கும் சிறந்த பரிகாரமாகும்.
தொடர்புடையது

மே மாத எண்கணித பலன்கள் – 7

மே மாத எண்கணித பலன்கள் – 6

மே மாத எண்கணித பலன்கள் – 5

மே மாத எண்கணித பலன்கள் – 4
வீடியோக்கள்

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை


