நல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் நாளை (பிப். 24) நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலாதொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்
/

பாகிஸ்தானுடன் கிரிக்கெட் தொடா்: பிசிசிஐ திட்டம்?

பாகிஸ்தானுடன் வரும் 2019-இல் கிரிக்கெட் தொடர் நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

News image
Updated On :30 ஜனவரி 2024, 4:53 pm

Raghavendran

பாகிஸ்தானுடன் வரும் 2019-இல் கிரிக்கெட் தொடர் நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இந்தியா, பாகிஸ்தான் நாடுகளிடையே நிலவும் சூழல் காரணமாக இரு நாடுகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் கடந்த 2014, 2015-இல் பாகிஸ்தானில் நடைபெற இருந்த தொடரில் இந்திய அணி பங்கேற்கவில்லை.

அச்சமயம் பாகிஸ்தான் சென்ற இலங்கை வீரர்கள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தால் பாதுகாப்பு காரணமாக எந்த அணியும் பாகிஸ்தான் செல்லவில்லை.  

இதனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) 70 மில்லியன் அமெரிக்க டாலா்கள் (ரூ.500 கோடிக்கு இழப்பீடு) வழங்க வேண்டும் என பிசிசிஐயிடம் கோரியுள்ளது.

இந்நிலையில் பிசிசிஐ தலைமை செயல் அதிகாரி ராகுல் ஜோரி, துபையில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை தொடரின் இடையே பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பின் அதிகாரிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்தியதாகக் கூறப்படுகிறது.

அப்போது இருநாடுகளுக்கு இடையில் அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் கிரிக்கெட் போட்டி நடத்துவது தொடர்பாக வினோத் ராய் தலைமையிலான செயற்குழுவுடன் ராகுல் ஜோரி ஆலோசிக்க உள்ளதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.