வெள்ளி கிலோவுக்கு ரூ. 10,000 குறைவு! தங்கம் விலை உயர்வு!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு! சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

ஆல் ஈஸ் வெல்: ஸ்மித் மீதான புகாரைத் திரும்பப் பெற்றது பிசிசிஐ!

இரு அணிகளும் தகுந்த ஒத்துழைப்பு தருவதாக முடிவெடுக்கப்பட்டது.

News image
Updated On :29 ஜனவரி 2024, 11:11 am

எழில்

டிஆர்எஸ் வாய்ப்பை பயன்படுத்துவது குறித்து "டிரெஸ்ஸிங்' அறையில் இருந்த சகவீரர்களிடம் உதவி கேட்ட ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் ஸ்மித், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஹேண்ட்ஸ்காம்ப் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஐசிசியிடம் புகார் அளித்த நிலையில் அந்தப் புகாரை வாபஸ் பெற்றுக்கொண்டது பிசிசிஐ.

இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான 2-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பெங்களூரில் நடைபெற்றது. இதில் உமேஷ் யாதவ் பந்துவீச்சில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்மித். இதையடுத்து டிஆர்எஸ் மூலம் நடுவரின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வது தொடர்பாக எதிர்முனையில் நின்ற ஹேண்ட்ஸ்காம்பிடம் ஆலோசித்த ஸ்மித், அதன்பிறகு "டிரெஸ்ஸிங்' அறையில் இருந்த சகவீரர்களிடம் சைகை மூலம் ஆலோசனை கேட்டார். அதற்கு இந்திய கேப்டன் கோலி எதிர்ப்புத் தெரிவிக்க, ஸ்மித் உடனடியாக மைதானத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். இதையடுத்து இரு நாட்டு வாரியங்களும் அறிக்கைகள் மூலம் மோதிக் கொண்டன. அதேநேரத்தில் சகவீரர்களின் உதவியை நாடுமாறு ஸ்மித்திடம் கூறியதை டுவிட்டரில் ஹேண்ட்ஸ்காம்ப் ஒப்புக்கொண்டார். இதனிடையே கோலி, ஸ்மித் மீது நடவடிக்கை இல்லை எனக்கூறிய ஐசிசி, பிரச்னையை முடிவுக்கு கொண்டு வர முயற்சித்தது.

Story image

இந்த நிலையில் ஸ்மித், ஹேண்ட்ஸ்காம்ப் ஆகியோருக்கு எதிராக ஐசிசியிடம் வியாழக்கிழமை புகார் அளித்துள்ள பிசிசிஐ, "டிரெஸ்ஸிங்' அறையில் இருந்த சகவீரர்களிடம் உதவி கேட்குமாறு ஸ்மித்தை ஹேண்ட்ஸ்காம்ப் வலியுறுத்தும் விடியோ ஆதாரத்தையும் சமர்ப்பித்துள்ளது. ஸ்மித்தும், ஹேண்ட்ஸ்காம்பும் கிரிக்கெட் உணர்வுக்கு எதிராக செயல்பட்டதோடு, கிரிக்கெட்டின் புகழுக்கு களங்கம் விளைவிக்க முயற்சித்ததாகவும் பிசிசிஐ குற்றம்சாட்டியுள்ளது. இது ஐசிசி விதிமுறைப்படி லெவல்-2 விதிமுறை மீறல் ஆகும் என பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்தன.

ஆனால் திடீரென பிசிசிஐ தனது புகாரை வாபஸ் வாங்கிக்கொண்டது. இரு அணிகளின் தலைமை நிர்வாக அதிகாரிகள் மும்பையில் கூட்டம் நடத்தினார்கள். அப்போது இரு தரப்புக்கும் இடையே சமாதான உடன்படிக்கை ஏற்பட்டது. இனிமேல் இதுபோல நடக்காது என்றும் கிரிக்கெட் விதிமுறைகள் சரியாகப் பின்பற்றப்படும் என்று இரு அணிகளும் உறுதியளித்தார்கள். கருத்துவேறுபாடுகளை ஒதுக்கிவிட்டு, தொடர் சிறப்பாக நடைபெற இரு அணிகளும் தகுந்த ஒத்துழைப்பு தருவதாக முடிவெடுக்கப்பட்டது. இதையடுத்து பிசிசிஐ, தனது புகாரைத் திரும்பப் பெற்றுக்கொண்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.