நடுவரின் தீர்ப்பை எதிர்த்து டிஆர்எஸ் மூலம் மேல்முறையீடு செய்வது தொடர்பாக "டிரெஸ்ஸிங்' அறையில் இருந்தவர்களை ஆஸ்ரேலிய கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் அணுகியது தொடர்பாக கோலி, ஸ்மித் ஆகிய இருவர் மீதும் எவ்வித நடவடிக்கையும் கிடையாது என ஐசிசி கூறியுள்ளது. இதற்கு இந்திய முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான 2-ஆவது டெஸ்ட் போட்டி பெங்களூரில் நடைபெற்றது. அதில் இந்தியா 75 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது. 2-ஆவது இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் உமேஷ் யாதவ் பந்துவீச்சில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். இதையடுத்து நடுவரின் தீர்ப்பை எதிர்த்து டிஆர்எஸ் மூலம் மேல்முறையீடு செய்யலாமா, வேண்டாமா என்பது குறித்து எதிர்முனையில் நின்ற ஹேண்ட்ஸ்காம்பிடம் ஆலோசித்த ஸ்மித், திடீரென "டிரெஸ்ஸிங்' அறையில் இருந்த பயிற்சியாளர் லீமான் மற்றும் சகவீரர்களிடம் சைகை மூலம் ஆலோசனை கேட்டார்.
இதுகுறித்து இந்திய கேப்டன் விராட் கோலி, நடுவரிடம் புகார் செய்தார். இதையடுத்து ஸ்மித்தை எச்சரித்த நடுவர்கள், அவரை உடனடியாக வெளியேறுமாறு உத்தரவிட்டனர். போட்டி முடிந்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த கோலி, ஸ்மித் மீது கடுமையாக சாடினார். ஆனால் ஸ்மித்தோ, குழப்பமான மனநிலையில் அதுபோன்ற தவறை செய்துவிட்டேன் என கூறினார். எனினும் பிரச்னை ஓய்ந்தபாடில்லை.
டிஆர்எஸ் விவகாரத்தில் கோலி-ஸ்மித் இடையிலான மோதல் தொடர்பாக அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் கிடையாது என ஐசிசி தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தில் கோலி, ஸ்மித் இடையிலான மோதல் தொடர்பான சூழலை ஆராய்ந்த பிறகே அவர்கள் மீது நடவடிக்கை தேவையில்லை என்ற முடிவுக்கு வந்தோம் என ஐசிசி கூறியுள்ளது.
இதுகுறித்து இந்திய முன்னாள் வீரர் கவாஸ்கர் ஒரு பேட்டியில் கூறியதாவது:
ஐசிசி ஒரு நாட்டுக்கு ஆதரவாக நடந்துகொள்ளக் கூடாது. ஸ்மித் செய்ததை இந்திய வீரர் செய்தாலும் நடவடிக்கை எடுக்கக்கூடாது.
3-வது டெஸ்ட் போட்டியில் தனக்கு அவுட் கொடுக்கும்போது ஓய்வறையை நோக்கிப் பார்த்து விராட் கோலி உதவி கோரவேண்டும் என நான் விரும்புகிறேன். விராட் கோலி அப்படிக் கேட்கும்போது ஐசிசி என்ன நடவடிக்கை எடுக்கிறது என்று பார்க்கவேண்டும். ஸ்மித்தின் நடவடிக்கையை ஐசிசியின் விதிமுறைகளை மீறிய ஒன்றாக ஐசிசி நடுவர் கிறிஸ் பிராட் பார்க்கவில்லை. தற்போது ஐசிசியின் நிலைப்பாடு பிசிசிஐ, கோலியை அவமதிப்பதாகவே உள்ளது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

எஸ்.எஸ்.பாலாஜி, ஆளுர் ஷாநவாஸ் ஆகியோருக்கு விசிக-வில் முக்கியப் பொறுப்பு!

பரமத்தி வேலூா் ஏலச் சந்தையில் பூக்களின் விலை உயா்வு

நீட் தோ்வு: நாமக்கல் மாவட்டத்தில் 4,741 போ் எழுதுகின்றனா்

திருச்செங்கோடு வாக்கு எண்ணிக்கை மையத்தில் மூன்று அடுக்கு போலீஸ் பாதுகாப்பு: ஆட்சியா்
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


