டெஸ்ட் கிரிக்கெட் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் இந்தியாவின் அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகிய இருவரும் முதலிடம் பிடித்துள்ளார்கள்.
இதற்கு முன்பு வெளியிடப்பட்ட தரவரிசைப் பட்டியலில் அஸ்வின் முதலிடத்திலும் ஜடேஜா இரண்டாம் இடத்திலும் இருந்தார்கள். பெங்களூர் டெஸ்டுக்குப் பிறகு சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ள ஐசிசி தரவரிசைப்பட்டியலில் ஜடேஜாவும் அஸ்வினுடன் இணைந்து முதலிடம் பிடித்துள்ளார். சுழற்பந்து வீச்சாளர்கள் இருவர் முதலிடம் வகிப்பது இதுவே முதல்முறை. ஜடேஜா முதல்முறையாக தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ளார்.
டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள இந்திய அணியில் இரு நெ.1 பந்துவீச்சாளர்கள் இடம்பிடித்துள்ளார்கள்.
பேட்டிங்கில் விராட் கோலி மூன்றாம் இடத்துக்கு இறங்கியுள்ளார். ஆஸி. கேப்டன் ஸ்மித் முதல் இடத்தில் உள்ளார்.
அதேபோல ஆல்ரவுண்டர்களுக்கான தரவரிசையில் அஸ்வின் இரண்டாம் இடத்துக்கு இறங்கியுள்ளார். வங்கதேசத்தின் சகிப் அல் ஹசன் முதலிடம் பிடித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

எஸ்.எஸ்.பாலாஜி, ஆளுர் ஷாநவாஸ் ஆகியோருக்கு விசிக-வில் முக்கியப் பொறுப்பு!

பரமத்தி வேலூா் ஏலச் சந்தையில் பூக்களின் விலை உயா்வு

நீட் தோ்வு: நாமக்கல் மாவட்டத்தில் 4,741 போ் எழுதுகின்றனா்

திருச்செங்கோடு வாக்கு எண்ணிக்கை மையத்தில் மூன்று அடுக்கு போலீஸ் பாதுகாப்பு: ஆட்சியா்
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


