2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

டெஸ்ட்: வெற்றியை நெருங்கும் இந்தியா! ஆஸி. அணி தடுமாற்றம்!

4-ம் நாள் தேநீர் இடைவேளையின்போது ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் இழப்புக்கு 101 ரன்கள்

News image
Updated On :29 ஜனவரி 2024, 11:10 am

எழில்

இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு 188 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 4-ம் நாள் தேநீர் இடைவேளையின்போது ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் இழப்புக்கு 101 ரன்கள் எடுத்து தடுமாறி வருகிறது.   

பெங்களூரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 71.2 ஓவர்களில் 189 ரன்களுக்கு சுருண்டது.  ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்ஸில் 122.4 ஓவர்களில் 279 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து முதல் இன்னிங்ஸில் 87 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-ஆவது இன்னிங்ஸை ஆடிய இந்திய அணி, நேற்றைய ஆட்ட நேர முடிவில் 72 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 213 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் ஒட்டுமொத்தமாக 126 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது. புஜாரா 173 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் 79, அஜிங்க்ய ரஹானே 105 பந்துகளில் 3 பவுண்டரிகளுடன் 40 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார்கள். 

இன்று ஆட்டம் தொடங்கியபோது, நேற்று போலவே புஜாராவும் ரஹானேவும் கவனமாக விளையாடினார்கள். கருண் நாயரின் முச்சதத்தால் அதிக அழுத்ததுக்கு ஆளாகியிருக்கும் ரஹானே, இந்த டெஸ்ட் போட்டியில் தனது திறமையை மீண்டும் நிரூபித்தார். அவர் 128 பந்துகளில் அரை சதம் எடுத்தார். ஆஸ்திரேலிய அணி புதிய பந்தைத் தேர்வு செய்தபிறகு ஆட்டத்தின் போக்கே மாறிப்போனது. ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர், சுழற்பந்துவீச்சுக்குச் சாதகமாக உள்ள ஆடுகளத்தில் தங்களது முழுத் திறமையையும் வெளிப்படுத்தினார்கள். எதிர்பாராதவிதமாக நடுவர் நாட் அவுட் கொடுத்தும் டிஆர்எஸ் முறையில் 52 ரன்களுடன் ஸ்டார்க் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார் ரஹானே. இதிலிருந்து சரிவு தொடங்க ஆரம்பித்தது. 

அடுத்தப் பந்திலேயே முச்சத நாயகன் கருண் நாயர் கிளீன் போல்ட் ஆகி ரன் எதுவும் எடுக்காமல் சோகத்துடன் வெளியேறினார். அடுத்தப் பந்தில் அவுட் ஆகாமல் ஸ்டார்க்கின் ஹாட்ரிக் முயற்சியைத் தடுத்தார் சாஹா.

அடுத்த ஓவரில் இந்திய ரசிகர்களுக்கு மேலும் அதிர்ச்சி தரும் விதமாக ஹேஸிவுட் பந்துவீச்சில் 92 ரன்களில் மார்ஷிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார் புஜாரா. புஜாரா - ரஹானே ஆகிய இருவரும் இன்றும் ஆஸி அணிக்கு நெருக்கடி தருவார்கள் என எதிர்பார்த்த நிலையில் அடுத்தடுத்து இருவரும் வெளியேறியது இந்திய அணியின் வெற்றி வாய்ப்பைத் தட்டிப் பறிப்பதுபோல இருந்தது. அடுத்ததாக வந்த அஸ்வின் 4 ரன்களில் ஹேஸில்வுட் பந்துவீச்சில் கிளீன் போல்ட் ஆகி வெளியேறினார். காலைப் பகுதியில் 11 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தது இந்தியா.

இதன்பிறகு சாஹா வேகமாக ரன்கள் குவிக்க முயற்சி செய்தார். ஸ்டார்க் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் அடித்தார். ஆனால் அடுத்த ஓவரில் அதேபோல அதிரடியாக ஆட முயன்ற உமேஷ் யாதவ் 1 ரன்னில் ஹேஸில்வுட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். நேற்று மாலை இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு கண்ணுக்கு எட்டுவதுபோல இருந்தது. ஆனால் இன்று அத்தனை கனவுகளும் நொறுங்கிப் போயின. 200 ரன்கள் முன்னிலை இல்லாமல் வெற்றி வாய்ப்பு கடினம் என்கிற நிலைமையில் கடகடவென விக்கெட்டுகள் விழுந்ததால் இந்திய அணி ரசிகர்கள் மிகவும் சோகமானார்கள்.

கடைசி விக்கெட்டுக்கு சாஹாவும் இஷாந்த் சர்மாவும் 9.4 ஓவர்கள் தாக்குப்பிடித்து ஆடினார்கள். இறுதியில் ஓ’கீஃப் பந்துவீச்சில் 6 ரன்களில் ஆட்டமிழந்தார் இஷாந்த் சர்மா. சாஹா கடைசிவரை போராடி 20 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இந்திய அணி தனது 2-வது இன்னிங்ஸில் 97.1 ஓவர்களில் 274 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியுள்ளது. ஆஸ்திரேலியத் தரப்பில் ஹேஸிவுட் 6 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதனால் ஆஸ்திரேலிய அணிக்கு 188 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

குறைந்த ரன்களே இலக்காக உள்ளதால் இந்திய அணியினர் ஆக்ரோஷமாகப் பந்துவீசினார்கள். இந்திய அணியின் பந்துவீச்சுக்குச் சிம்மசொப்பனமாக விளங்கும் ரென்ஷாவின் விக்கெட்டை வீழ்த்தினார் இஷாந்த் சர்மா. ரென்ஷா 5 ரன்கள் மட்டுமே எடுத்தார். அதிரடியாக ஆட முயன்ற வார்னரை இந்த இன்னிங்ஸிலும் 17 ரன்களில் வீழ்த்தினார் அஸ்வின். அடுத்ததாக ஷான் மார்ஷ் (9), ஸ்மித் (28) ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார் உமேஷ் யாதவ். முக்கிய தலைகள் பெவிலியன் திரும்பியதால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. மிட்செல் மார்ஷ் கடகடவென மூன்று பவுண்டரிகள் அடித்தார். அவர் அஸ்வின் பந்துவீச்சில் 13 ரன்களில் வீழ்ந்தார். தேநீர் இடைவேளையை நெருங்கும் வேளையில் வேடின் விக்கெட்டை வீழ்த்தினார் அஸ்வின். அவர் ரன்கள் எதுவும் எடுக்காமல் வெளியேறினார்.

4-ம் நாள் தேநீர் இடைவேளையின்போது ஆஸ்திரேலிய அணி 27.5 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 101 ரன்கள் எடுத்து தடுமாறி வருகிறது. ஹேண்ட்ஸ்கோம்ப் 19 ரன்களுடன் களத்தில் உள்ளார். இன்னமும் 4 விக்கெட்டுகளே மீதமுள்ள நிலைமையில் இந்திய அணியின் வெற்றி சாத்தியமாகும் சூழலில் உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.