ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் அதிக ரன்கள் முன்னிலை பெறுவதற்காகக் கடும் முயற்சி செய்துவருகிறது. 5-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த புஜாரா - ரஹானே அற்புதமாக விளையாடி இந்திய அணிக்குச் சாதகமான சூழலை உருவாக்கியுள்ளார்கள்.
பெங்களூரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 71.2 ஓவர்களில் 189 ரன்களுக்கு சுருண்டது. 2-ஆவது நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலியா 106 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 237 ரன்கள் சேர்த்தது. மேத்யூ வேட் 25, மிட்செல் ஸ்டார்க் 14 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள்.
இன்று ஆட்டம் தொடங்கியவுடன் சில ஓவர்கள் கழித்து ஸ்டார்க்கின் விக்கெட்டை வீழ்த்தினார் அஸ்வின். அவர் 26 ரன்கள் எடுத்தார். இதன்பிறகு 121-வது ஓவரில் ஜடேஜா அடுத்தடுத்த பந்துகளில் வேட் (40), லயன் (0) ஆகியோரை வீழ்த்தினார். ஹேஸில்வுட் அடுத்தப் பந்தைச் சரியாக ஆடி ஜடேஜாவின் ஹாட்ரிக் முயற்சியைத் தடுத்தார். லயனின் விக்கெட் ஜடேஜாவின் 5-வது விக்கெட் ஆகும். இந்த இன்னிங்ஸில் மற்ற பந்துவீச்சாளர்களை விடவும் குறைவான ஓவர்கள் வீசிய ஜடேஜா பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார்.
பிறகு கடைசி விக்கெட்டையும் வீழ்த்தி அசத்தினார் ஜடேஜா. ஹேஸில்வுட் 1 ரன்னில் வீழ்ந்தார். ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்ஸில் 122.4 ஓவர்களில் 276 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதையடுத்து அந்த அணி முதல் இன்னிங்ஸில் 87 ரன்கள் முன்னிலை பெற்றது. இந்தியத் தரப்பில் ஜடேஜா 63 ரன்களைக் கொடுத்து 6 விக்கெட் வீழ்த்தினார். அஸ்வின் 2 விக்கெட்டுகள், இஷாந்த், உமேஷ் ஆகியோர் தலா 1 விக்கெட்டை எடுத்தார்கள்.
இதன்பிறகு தனது 2-வது இன்னிங்ஸைத் தொடர்ந்த இந்திய அணி மூன்றாம் நாள் உணவு இடைவேளையின்போது விக்கெட் இழப்பின்றி 36 ரன்கள் சேர்த்தது. ராகுல் 20, முகுந்த் 16 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள்.
ஆனால் உணவு இடைவேளைக்குப் பிறகு வீசப்பட்ட முதல் ஓவரிலேயே 16 ரன்களில் ஹேஸில்வுட் பந்தில் ஆட்டமிழந்தார் முகுந்த். அற்புதமான பந்துவீச்சினால் ஆஸ்திரேலிய அணி தொடர்ந்து நெருக்கடி அளித்தாலும் தொடக்க வீரர் ராகுல் பிரமாதமாக விளையாடினார். 82 பந்துகளில் அரை சதம் எடுத்தார். இந்த ஆடுகளத்தில் வேறு யாரை விடவும் திறனாக விளையாடியவர் ராகுல் மட்டுமே. அவரால் அதிகப் பந்துகளை வீணடிக்காமல் ஆடமுடிந்தது. ஆனால் ஸ்மித்தின் அற்புதமான கேட்சினால் 51 ரன்களில் வெளியேறினார் ராகுல். ஓரளவு நம்பிக்கையுடன் விளையாடிய கோலி, ஹேஸிவுட்டின் பந்துவீச்சில் எல்பிடபிள்யூ முறையில் 15 ரன்களில் வீழ்ந்தார். இதன்பிறகு ரஹானேவுக்குப் பதிலாக ஜடேஜா களமிறங்கினார். இந்த இந்த வித்தியாசமான முயற்சி பலன் அளிக்கவில்லை. ஜடேஜா 2 ரன்களில் வெளியேறினார். இவருடைய விக்கெட்டையும் ஹேஸில்வுட் வீழ்த்தினார்.
3-ம் நாள் தேநீர் இடைவேளையின்போது இந்திய அணி 39 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 122 ரன்கள் எடுத்தது. புஜாரா 34, ரஹானே 2 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள்.
இதன்பிறகு தொடர்ந்து துல்லியமான பந்துவீச்சின் மூலம் கடுமையான நெருக்கடி அளித்தார்கள் ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள். ஆனால் கவனமாக விளையாடி அணியின் ஸ்கோரை மெல்ல மெல்ல உயர்த்தினார்கள் இருவரும். திறமையான தடுப்பாட்டத்தை வெளிப்படுத்தியால் ஆஸி. அணியால் இந்த ஜோடியைப் பிரிக்கமுடியாமல் போனது. புஜாரா 125 பந்துகளில் அரை சதத்தை எட்டினார்.
3-வது நாளின் ஆட்ட முடிவில் இந்திய அணி தனது 2-வது இன்னிங்ஸில் 72 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 213 ரன்கள் எடுத்துள்ளது. இன்னமும் 6 விக்கெட்டுகள் மீதமுள்ள நிலையில் 126 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது இந்திய அணி. 5-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த புஜாராவும் ரஹானேவும் ஆட்டமிழக்காமல் 93 ரன்கள் சேர்த்துள்ளார்கள். புஜாரா 70, ரஹானே 40 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள்.
இந்திய அணி தோல்வி பெறுகிற நிலையிலிருந்து இன்று தனக்குச் சாதகமான சூழலை உருவாக்கியுள்ளது. இந்திய அணி 250 ரன்கள் முன்னிலை பெற்றுவிட்டால் இந்த டெஸ்ட் போட்டியில் வெற்றி பெறுவது கூட சாத்தியமாகிவிடும். இந்த நிலையில் மிகவும் சுவாரசியமான முடிவை நோக்கிச் செல்கிறது பெங்களூர் டெஸ்ட்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பரமத்தி வேலூா் ஏலச் சந்தையில் பூக்களின் விலை உயா்வு

நீட் தோ்வு: நாமக்கல் மாவட்டத்தில் 4,741 போ் எழுதுகின்றனா்

திருச்செங்கோடு வாக்கு எண்ணிக்கை மையத்தில் மூன்று அடுக்கு போலீஸ் பாதுகாப்பு: ஆட்சியா்

தொழில்துறை மின்னணு சாதனங்கள் உற்பத்தித் துறையில் களமிறங்கிய எல்&டி
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


