பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!தலைமைத் தோ்தல் ஆணையரை நீக்கக்கோரி மாநிலங்களவையில் எதிா்க்கட்சிகள் புதிய நோட்டீஸ்டிசம்பரில் இருந்து சுங்கச் சாவடிகளில் இடையூறற்ற சேவை: நிதின் கட்கரி சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு: 6.68 லட்சம் மாணவா்கள் விண்ணப்பம்பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!
/

டெஸ்ட்: ஜடேஜா 6 விக்கெட்டுகள்! ஆஸி. 276 ரன்களுக்கு ஆல் அவுட்!

இந்திய அணி மூன்றாம் நாள் உணவு இடைவேளையின்போது விக்கெட் இழப்பின்றி 36 ரன்கள் சேர்த்துள்ளது.

News image
Updated On :6 மார்ச் 2017, 9:47 am

இந்தியாவுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்ஸில் 276 ரன்களுக்கு ஆட்டமிழந்துள்ளது. இதனால் அந்த அணி முதல் இன்னிங்ஸில் 87 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. 

பெங்களூரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 71.2 ஓவர்களில் 189 ரன்களுக்கு சுருண்டது.  2-ஆவது நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலியா 106 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 237 ரன்கள் சேர்த்தது. மேத்யூ வேட் 25, மிட்செல் ஸ்டார்க் 14 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள்.

இன்று ஆட்டம் தொடங்கியவுடன் சில ஓவர்கள் கழித்து ஸ்டார்க்கின் விக்கெட்டை வீழ்த்தினார் அஸ்வின். அவர் 26 ரன்கள் எடுத்தார். இதன்பிறகு 121-வது ஓவரில் ஜடேஜா அடுத்தடுத்த பந்துகளில் வேட் (40), லயன் (0) ஆகியோரை வீழ்த்தினார். ஹேஸில்வுட் அடுத்தப் பந்தைச் சரியாக ஆடி ஜடேஜாவின் ஹாட்ரிக் முயற்சியைத் தடுத்தார். லயனின் விக்கெட் ஜடேஜாவின் 5-வது விக்கெட் ஆகும். இந்த இன்னிங்ஸில் மற்ற பந்துவீச்சாளர்களை விடவும் குறைவான ஓவர்கள் வீசிய ஜடேஜா பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார்.

பிறகு கடைசி விக்கெட்டையும் வீழ்த்தி அசத்தினார் ஜடேஜா. ஹேஸில்வுட் 1 ரன்னில் வீழ்ந்தார். ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்ஸில் 122.4 ஓவர்களில் 276 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதையடுத்து அந்த அணி முதல் இன்னிங்ஸில் 87 ரன்கள் முன்னிலை பெற்றது. இந்தியத் தரப்பில் ஜடேஜா 63 ரன்களைக் கொடுத்து 6 விக்கெட் வீழ்த்தினார். அஸ்வின் 2 விக்கெட்டுகள், இஷாந்த், உமேஷ் ஆகியோர் தலா 1 விக்கெட்டை எடுத்தார்கள்.

இதன்பிறகு தனது 2-வது இன்னிங்ஸைத் தொடர்ந்த இந்திய அணி மூன்றாம் நாள் உணவு இடைவேளையின்போது விக்கெட் இழப்பின்றி 36 ரன்கள் சேர்த்துள்ளது. ராகுல் 20, முகுந்த் 16 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள். தற்போது இந்திய அணி 10 விக்கெட்டுகள் மீதமுள்ள நிலையில் 49 ரன்கள் பின்தங்கியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.