நல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் நாளை (பிப். 24) நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலாதொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்
/

பௌச்சர், கில்கிறிஸ்டை தொடர்ந்து தோனி புதிய சாதனை!

800 பேரை ஆட்டமிழக்கச் செய்த முதல் ஆசிய விக்கெட் கீப்பர் என்ற சாதனையையும் படைத்தார். 

News image
Updated On :30 ஜனவரி 2024, 4:56 pm

Raghavendran

முன்னணி விக்கெட் கீப்பர்கள் மார்க் பௌச்சர் மற்றும் ஆடம் கில்கிறிஸ்ட் ஆகியோரைத் தொடர்ந்து தோனி 3-ஆவது இடத்தைப் பிடித்து புதிய சாதனைப் படைத்தார். 

வங்கதேசத்துடனான ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் அதிக வீரர்களை ஆட்டமிழக்கச் செய்த வீரர்களில் பௌச்சர், கில்கிறிஸ்ட் ஆகியோரைத் தொடர்ந்து 3-ஆவது இடத்தைப் பிடித்தார். இப்போட்டியில் 2 ஸ்டம்பிங்குகள் செய்ததன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் 800 வீரர்களை ஆட்டமிழக்கச் செய்தவர் என்ற புதிய சாதனையைப் படைத்தார்.

இதன்மூலம் 800 பேரை ஆட்டமிழக்கச் செய்த முதல் ஆசிய விக்கெட் கீப்பர் என்ற சாதனையையும் படைத்தார். 

இதில் தென் ஆப்பிரிக்காவில் மார்க் பௌச்சர் 998 பேரையும், ஆஸ்திரேலியாவின் ஆடம் கில்கிறிஸ்ட் 905 பேரையும் ஆட்டமிழக்கச் செய்து முதல் இரு இடங்களில் உள்ளனர்.

Story image

அதேபோன்று சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ஸ்டம்பிங்குகள் (184) செய்த விக்கெட் கீப்பர்களில் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். தோனியை தொடர்ந்து இலங்கையின் குமார் சங்ககாரா 139 மற்றும் ரோமேஷ் கலுவிதரனா 101 ஸ்டம்பிங்குகளுடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

மொத்தம் 90 டெஸ்ட் போட்டிகளில் 256 கேட்சுகள், 38 ஸ்டம்பிங்குகளுடன் 294 பேரை ஆட்டமிழக்கச் செய்துள்ளார். 327 ஒருநாள் போட்டிகளில் 306 கேட்சுகள், 113 ஸ்டம்பிங்குகளுடன் 419 பேரை ஆட்டமிழக்கச் செய்துள்ளார். அதுபோன்று 93 டி20 போட்டிகளில் 54 கேட்சுகள் 33 ஸ்டம்பிங்குகளுடன் 87 பேரை ஆட்டமிழக்கச் செய்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.