கட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வே
/

புள்ளிப்பட்டியலில் முதலிடம் பெறுமா பஞ்சாப்? இந்த போட்டியில் முதல் பேட்டிங்

170-ஆவது முறை கேப்டனாக செயல்பட்டு கௌதம் கம்பீர் 2-ஆம் இடம் பிடிக்கிறார். மகேந்திர சிங் தோனி 244 போட்டிகளுடன் முதலிடத்தில் உள்ளார்.

News image
Updated On :30 ஜனவரி 2024, 12:50 pm

Raghavendran

11-ஆவது ஐபிஎல் சீசனின் 22-ஆவது லீக் ஆட்டம் தில்லியில் உள்ள ஃபெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் திங்கள்கிழமை இரவு 8 மணிக்கு தொடங்கி நடைபெறுகிறது. இதில் டெல்லி டேர்டெவில்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன.

இதுவரை இவ்விரு அணிகளும் மோதிய ஆட்டங்களில் டேர்டெவில்ஸ் 9 முறையும், பஞ்சாப் 12 முறையும் வெற்றிபெற்றுள்ளன. தில்லியில் நடைபெற்ற போட்டிகளில் டெல்லி 5 முறையும், பஞ்சாப் 4 முறையும் வென்றுள்ளன.

இப்போட்டியின் மூலம் அதிக டி20 போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டவர்களில் மேற்கிந்திய தீவுகளின் டேரன் சமியை பின்னுக்குத்தள்ளி 170-ஆவது முறை கேப்டனாக செயல்பட்டு கௌதம் கம்பீர் 2-ஆம் இடம் பிடிக்கிறார். அதிக டி20 போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டவர்களில் மகேந்திர சிங் தோனி 244 போட்டிகளுடன் முதலிடத்தில் உள்ளார்.

நடப்பு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் ஆகிய அணிகள் 5 போட்டிகளில் 4 வெற்றி, 1 தோல்வியுடம் 8 புள்ளிகள் பெற்றுள்ளன. இருப்பினும் ரன்ரேட் அடிப்படையில் சென்னை முதலிடத்திலும், பஞ்சாப் 2-ஆம் இடத்திலும் உள்ளன.

இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி டேர்டெவில்ஸ் அணி கேப்டன் கௌதம் கம்பீர் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.