முதல் அரைசதம் அடிப்பாரா யுவராஜ்? டாஸ் வென்ற அஸ்வின் பந்துவீச்சு தேர்வு
கொல்கத்தாவுக்கு எதிராக 18 இன்னிங்ஸ்களில் களம்கண்ட யுவராஜ் சிங் ஒரு அரைசதம் கூட அடித்ததில்லை.


11-ஆவது சீசன் ஐபிஎல் போட்டிகளின் 18-ஆவது லீக் ஆட்டம் சனிக்கிழமை மாலை 4 மணிக்கு தொடங்கி நடைபெறுகிறது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் கேப்டன் அஸ்வின் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இவ்விரு அணிகளும் இதுவரை 21 முறை நேருக்குநேர் மோதியுள்ளன. அதில் கொல்கத்தா 14 முறையும், பஞ்சாப் 7 முறையும் வெற்றிபெற்றுள்ளன. ஈடன் கார்டனில் நடைபெற்ற ஆட்டங்களில் கொல்கத்தா 7 முறையும், பஞ்சாப் 2 முறையும் வென்றுள்ளன.
பஞ்சாப் அணிக்கு எதிராக அதிகபட்சமாக கொல்கத்தா பந்துவீச்சாளர் சுனில் நரேன் மொத்தம் 13 ஆட்டங்களில் 24 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். கொல்கத்தா அணிக்கு எதிராக கிறிஸ் கெயில் இதுவரை 13 இன்னிங்ஸ்களில் விளையாடி 532 ரன்கள் குவித்துள்ளார். இதில் ஒரு சதமும், 3 அரைசதங்களும் அடங்கும்.
கொல்கத்தாவுக்கு எதிராக 18 இன்னிங்ஸ்களில் களம்கண்ட யுவராஜ் சிங் ஒரு அரைசதம் கூட அடித்ததில்லை. அதிகபட்சமாக ஒரு இன்னிங்ஸில் 44 ரன்கள் எடுத்துள்ளார்.
இன்னும் 66 ரன்கள் எடுத்தால் கொல்கத்தா அணிக்காக 2 ஆயிரம் ரன்களுக்கு மேல் அடித்த 2-ஆவது வீரர் என்ற பெருமையை ராபின் உத்தப்பா பெறுவார். கௌதம் கம்பீர் 3,035 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார். கடந்த 2013-ஆம் ஆண்டு முதல் ஈடன் கார்டனில் பஞ்சாப்புடன் நடைபெற்ற 5 போட்டிகளிலும் கொல்கத்தா வென்றுள்ளது.
இரு அணிகளின் வீரர்கள் விவரம் பின்வருமாறு:
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:
சுனில் நரேன், கிறிஸ் லயன், ராபின் உத்தப்பா, நிதீஷ் ராணா, தினேஷ் கார்த்திக் (கேப்டன், விக்கெட் கீப்பர்), ஆண்ட்ரே ரசல், ஷுப்மான் கில், டாம் குர்ரன், பியூஷ் சாவ்லா, ஷிவம் மாவி, குல்தீப் யாதவ்.
கிங்ஸ் லெவன் பஞ்சாப்:
லோகேஷ் ராகுல் (விக்கெட் கீப்பர்), கிறிஸ் கெயில், மயங்க் அகர்வால், கருண் நாயர், ஆரோன் ஃபிஞ்ச், யுவராஜ் சிங், அஸ்வின் (கேப்டன்), ஆண்ட்ரூ டை, பரிந்தர் ஸ்ரண், அங்கித் ராஜ்பூட், முஜீப்-உர்-ரஹ்மான்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...