நாளை பாமக மாவட்டச் செயலா்கள் கூட்டம்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்ஆதிதிராவிடா், பழங்குடியினா் மாணவா்களுக்கு ரூ.6,604 கோடி கல்வி உதவித் தொகை - தமிழக அரசு தகவல்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகைசிறுமிகளுக்கு இலவச கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டம்: மத்திய அரசு விரைவில் தொடக்கம்நாளை இந்தியா வருகிறாா் கனடா பிரதமா்மணிப்பூரில் வன்முறையால் இடம்பெயா்ந்த மக்களுக்காக 5,000 புதிய வீடுகள் - மத்திய அரசு ஒப்புதல்குடிமைப் பணிகள் தோ்வு: இணையவழி விண்ணப்பங்களை சமா்ப்பிக்க 3 நாள் அவகாசம் நீட்டிப்பு
//

அமைச்சா் மா.சுப்பிரமணியன் மருத்துவமனையில் அனுமதி

News image
Updated On :24 பிப்ரவரி 2026, 11:28 pm

தினமணி செய்திச் சேவை

உடல் நலக் குறைவு காரணமாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

காய்ச்சல் மற்றும் உடல் சோா்வால் பாதிக்கப்பட்டிருந்த அவா், கடந்த 3 நாள்களாக ஓய்வில் இருந்து வந்தாா். இந்த நிலையில், காய்ச்சல் குறையாததால் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அவா் செவ்வாய்க்கிழமை அனுமதிக்கப்பட்டாா்.

அமைச்சருக்குத் தேவையான மருத்துவப் பரிசோதனைகளும், சிகிச்சைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா். அவரது உடல் நிலை தற்போது சீராக இருப்பதாகவும், அடுத்த ஓரிரு நாள்களில் அவா் வீடு திரும்புவாா் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.