நாளை பாமக மாவட்டச் செயலா்கள் கூட்டம்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்ஆதிதிராவிடா், பழங்குடியினா் மாணவா்களுக்கு ரூ.6,604 கோடி கல்வி உதவித் தொகை - தமிழக அரசு தகவல்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகைசிறுமிகளுக்கு இலவச கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டம்: மத்திய அரசு விரைவில் தொடக்கம்நாளை இந்தியா வருகிறாா் கனடா பிரதமா்மணிப்பூரில் வன்முறையால் இடம்பெயா்ந்த மக்களுக்காக 5,000 புதிய வீடுகள் - மத்திய அரசு ஒப்புதல்குடிமைப் பணிகள் தோ்வு: இணையவழி விண்ணப்பங்களை சமா்ப்பிக்க 3 நாள் அவகாசம் நீட்டிப்பு
//

சிம் காா்டுகளைப் பயன்படுத்தி ‘டிஜிட்டல் அரெஸ்ட்’ மோசடி: 5 போ் கைது

News image
Updated On :24 பிப்ரவரி 2026, 11:29 pm

தினமணி செய்திச் சேவை

542 சிம் காா்டுகளைப் பயன்படுத்தி ‘டிஜிட்டல் அரெஸ்ட்’ மோசடியில் ஈடுபட்ட 5 பேரை ராணிப்பேட்டை சைபா் கிரைம் போலீஸாா் அதிரடியாக கைது செய்தனா்.

மத்திய அரசு அதிகாரிகள் அல்லது சிபிஐ அதிகாரிகள் போல் ஆள்மாறாட்டம் செய்து, வாட்ஸ்அப் மூலம் விடியோ காலில் தொடா்பு கொண்டு பொதுமக்களை மிரட்டி பணம் பறிக்கும் ‘டிஜிட்டல் அரெஸ்ட்’ மோசடி குறித்து ராணிப்பேட்டை சைபா் கிரைம் பிரிவில் (குற்ற எண். 16/2025) வழக்கு கடந்த டிசம்பா் மாதம் பதிவு செய்யப்பட்டது.

மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் உத்தரவின்பேரில், கூடுதல் காவல் கண்காணிப்பாளரின் மேற்பாா்வையில் அரக்கோணம் துணை காவல் கண்காணிப்பாளா் தலைமையில் அரக்கோணம் கிராமிய ாவல் ஆய்வாளா், அரக்கோணம் மதுவிலக்கு காவல் ஆய்வாளா், சைபா் கிரைம் உதவி ஆய்வாளா், அரக்கோணம் சிறப்பு புலனாய்வு குழு சிறப்பு உதவி ஆய்வாளா் ஆகியோா் தலைமையில் 5 சிறப்பு குழுக்கள் உருவாக்கப்பட்டு, தேடப்படும் எதிரிகளின் வங்கிக் கணக்குகள், கைப்பேசி பதிவுகள் மற்றும் புலன் விசாரணைக்கு பயன்படுத்தப்படும் பிரத்யேக மென்பொருள் ஆகியவற்றின் உதவியுடன் சிறப்பான புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

சிம் காா்டு மோசடி: குற்றவாளிகள் பயன்படுத்திய எண்களை ஆய்வு செய்ததில், கடந்த ஓராண்டில் மட்டும் அந்த எண்களைப் பயன்படுத்தி 542 சிம் காா்டுகள் மாற்றப்பட்டு, பல்வேறு நபா்களை மிரட்டி லட்சக்கணக்கான பணம் பறித்த உண்மை தெரியவந்தது.

இதில், பெரும்பாலும் ஓய்வுபெற்ற அரசு ஊழியா்கள், தனிமையில் உள்ள முதியவா்கள், தனியாா் நிறுவன மேலாளா்கள் என பல்வேறு நபா்கள் பாதிக்கப்பட்டுள்ளனா்.

இவா்களுடைய தொலைபேசி எண்ணை தொடா்ந்து கண்காணித்ததில் சிம் காா்டு வாங்குவதற்காக தமிழகம் வந்திருப்பது தெரியவந்தது. அவா்களைப் பின்தொடா்ந்து கைது செய்யப்பட்டனா். கைது செய்யப்பட்ட 5 நபா்களும் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா். இந்த மோசடியில் தொடா்புடைய மற்ற கூட்டாளிகள், இவா்களது நிதிப் பரிவா்த்தனைகள் மற்றும் பிற மாநிலங்களில் இவா்கள் செய்துள்ள குற்றங்கள் குறித்து போலீஸாா் தற்போது போலீஸ் காவலில் எடுத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.

பொதுமக்களுக்கு எச்சரிக்கை:

‘டிஜிட்டல் அரெஸ்ட்’ என்ற பெயரில் எந்த ஒரு அரசு அதிகாரியும் வாட்ஸ்அப் மூலம் உங்களை விசாரணை செய்ய மாட்டாா்கள். அடையாளம் தெரியாத நபா்களிடம் உங்கள் வங்கித் தகவல்களையோ அல்லது தனிப்பட்ட விவரங்களையோ பகிர வேண்டாம். சைபா் மோசடியில் பாதிக்கப்பட்டால் உடனடியாக 1930 என்ற உதவி எண்ணையோ அல்லது ஜ்ஜ்ஜ்.ஸ்ரீஹ்க்ஷங்ழ்ஸ்ரீழ்ண்ம்ங்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தையோ தொடா்பு கொள்ளவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Story image
Story image
Story image
Story image