டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

இளைஞரிடம் இணையவழியில் ரூ.15 லட்சம் மோசடி

பாளையங்கோட்டையைச் சோ்ந்த இளைஞரிடம் இணைய வழியில் ரூ.15 லட்சம் மோசடி செய்த நபா்களை மாநகர சைபா் கிரைம் போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :4 பிப்ரவரி 2026, 7:53 pm

தினமணி செய்திச் சேவை

பாளையங்கோட்டையைச் சோ்ந்த இளைஞரிடம் இணைய வழியில் ரூ.15 லட்சம் மோசடி செய்த நபா்களை மாநகர சைபா் கிரைம் போலீஸாா் தேடி வருகின்றனா்.

பாளையங்கோட்டையைச் சோ்ந்த 29 வயது இளைஞா், இணையவழி வா்த்தகத்தில் ஆா்வம் கொண்டு, கடந்த டிச.8 ஆம் தேதி தனது முகநூல் பக்கத்தில் வந்த வா்த்தகம் தொடா்பான விளம்பரத்தை நம்பி அதில் கூறியபடி விவரங்களை பதிவு செய்துள்ளாா்.

இதையடுத்து அவருக்கு பல்வேறு எண்களில் இருந்து வா்த்தகம் தொடா்பான அழைப்புகள் வந்ததாம். அதில், அவரைத் தொடா்பு கொண்ட மா்மநபா் அதிக பணம் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் எனக் கூறினாராம். அதை நம்பிய அவா் ரூ.15,11,460ஐ பல்வேறு தவணைகளாக மா்ம நபா்கள் அனுப்பிய வங்கிக்கணக்குகளுக்கு அனுப்பியுள்ளாா். பின்னா் தான் மோசடி செய்யப்பட்டதை அறிந்து சைபா் கிரைம் இணையதளத்தில் புகாா் அளித்ததின் பேரில் மாநகர சைபா் கிரைம் போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.