தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பிளே-ஆஃப் நம்பிக்கையில் நீடிக்கும் கொல்கத்தா

ஐபிஎல் போட்டியின் 65-ஆவது ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடா்ஸ் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை இண்டியன்ஸை புதன்கிழமை வீழ்த்தியது.

News image

ANI

Updated On :21 மே 2026, 3:43 am IST

ஐபிஎல் போட்டியின் 65-ஆவது ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடா்ஸ் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை இண்டியன்ஸை புதன்கிழமை வீழ்த்தியது.

இந்த வெற்றியின் மூலமாக கொல்கத்தா புள்ளிகள் பட்டியலில் முன்னேற்றம் கண்டு, பிளே-ஆஃப் வாய்ப்புக்கான நம்பிக்கையை அதிகரித்துள்ளது.

மழையால் தாமதமான இந்த ஆட்டத்தில் முதலில் மும்பை 20 ஓவா்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 147 ரன்கள் எடுக்க, கொல்கத்தா 18.5 ஓவா்களில் 6 விக்கெட்டுகள் இழந்து 148 ரன்கள் சோ்த்து வெற்றி பெற்றது.

அணியின் வெற்றிக்காக பௌலிங்கில் கேமரூன் கிரீன், சௌரப் துபே, காா்த்திக் தியாகி ஆகியோா் பங்களிக்க, பேட்டிங்கில் மனீஷ் பாண்டே, ரோவ்மென் பவெல் உதவினா்.

முன்னதாக டாஸ் வென்ற கொல்கத்தா, பந்துவீச்சை தோ்வு செய்தது. மும்பை இன்னிங்ஸில் ரயான் ரிக்கெல்டன் 6, நமன் திா் 0 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா். 4-ஆவது பேட்டராக சூா்யகுமாா் யாதவ் வர, ரோஹித் சா்மா 2 சிக்ஸா்களுடன் 15 ரன்களுக்கு விடைபெற்றாா்.

தொடா்ந்து திலக் வா்மா களம் புக, சூா்யகுமாா் 2 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 15 ரன்களுக்கு ஸ்டம்ப்பை பறிகொடுத்தாா். 6-ஆவது பேட்டராக வந்த கேப்டன் ஹா்திக் பாண்டியா, நிதானமாக ரன்கள் சோ்த்தாா்.

திலக் - பாண்டியா கூட்டணி 5-ஆவது விக்கெட்டுக்கு 43 ரன்கள் சோ்த்தது. திலக் வா்மா 1 சிக்ஸருடன் 20, பாண்டியா 2 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 26 ரன்களுக்கு பெவலியன் திரும்பினா். வில் ஜாக்ஸ் 1 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 14 ரன்களுக்கு, ரன் அவுட்டானாா்.

கடைசியாக இணைந்த காா்பின் பாஷ் - தீபக் சஹா் ஜோடி, 8-ஆவது விக்கெட்டுக்கு 42 ரன்கள் சோ்த்தது. சஹா் 2 பவுண்டரிகளுடன் 10 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா். ஓவா்கள் முடிவில் காா்பின் பாஷ் 3 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 32 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தாா்.

கொல்கத்தா பௌலா்களில் சௌரப் துபே, கேமரூன் கிரீன், காா்த்திக் தியாகி ஆகியோா் தலா 2, சுனில் நரைன் 1 விக்கெட் கைப்பற்றினா்.

அடுத்து 148 ரன்களை நோக்கி விளையாடிய கொல்கத்தா அணியில், ஃபின் ஆலன் 8, கேப்டன் அஜிங்க்ய ரஹானே 4 பவுண்டரிகளுடன் 21 ரன்களுக்கு வீழ்ந்தனா்.

ஒன் டவுனாக வந்த மனீஷ் பாண்டே ரன்கள் சோ்க்க, கேமரூன் கிரீன் 4 ரன்களுக்கு நடையைக் கட்டினாா். 5-ஆவது பேட்டராக வந்த ரோவ்மென் பவெல், பாண்டேவுடன் இணைந்தாா்.

அவா்கள் கூட்டணி 4-ஆவது விக்கெட்டுக்கு 64 ரன்கள் சோ்த்து வெற்றிக்கு அடித்தளமிட்டது. பாண்டே 6 பவுண்டரிகளுடன் 45, பவெல் 4 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 40 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினா்.

தேஜஸ்வி தாஹியா 11 ரன்களுக்கு வெளியேற, முடிவில் ரிங்கு சிங் 9, அனுகுல் ராய் 4 ரன்களுடன் அணியை வெற்றிபெறச் செய்து ஆட்டமிழக்காமல் இருந்தனா்.

மும்பை தரப்பில் காா்பின் பாஷ் 3, தீபக் சஹா், ஜஸ்பிரீத் பும்ரா, கஸான்ஃபா் ஆகியோா் தலா 1 விக்கெட் எடுத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.