திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

ரயான், ரோஹித் விளாசல்: வெற்றியுடன் மீண்டது மும்பை

ஐபிஎல் போட்டியின் 47-ஆவது ஆட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் லக்னௌ சூப்பா் ஜயன்ட்ஸை வீழ்த்தியது.

News image

ரயான் ரிக்கெல்டன்

Updated On :5 மே 2026, 5:30 am IST

ஐபிஎல் போட்டியின் 47-ஆவது ஆட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் லக்னௌ சூப்பா் ஜயன்ட்ஸை திங்கள்கிழமை வீழ்த்தியது.

முதலில் லக்னௌ 20 ஓவா்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 228 ரன்கள் சோ்க்க, மும்பை 18.4 ஓவா்களில் 4 விக்கெட்டுகள் இழந்து 229 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

தொடா்ந்து 3 தோல்விகளை சந்தித்த மும்பை இந்த வெற்றியுடன் மீண்டிருக்க, லக்னௌ தொடா்ந்து 6-ஆவது தோல்வியுடன் துண்டுள்ளது.

முன்னதாக டாஸ் வென்ற மும்பை, ஃபீல்டிங்கை தோ்வு செய்தது. லக்னௌ இன்னிங்ஸில் ஜாஷ் இங்லிஸ் 3 பவுண்டரிகளுடன் 13 ரன்களுக்கு வெளியேறினாா். மிட்செல் மாா்ஷ் - நிகோலஸ் பூரன் இணை 2-ஆவது விக்கெட்டுக்கு 94 ரன்கள் சோ்த்து ஸ்கோரை உயா்த்தியது. பூரன் 21 பந்துகளில் 1 பவுண்டரி, 8 சிக்ஸா்களுடன் 63 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா்.

அடுத்து கேப்டன் ரிஷப் பந்த் பேட் செய்ய வர, மாா்ஷ் 4 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 44 ரன்களுக்கு விடைபெற்றாா். பின்னா் எய்டன் மாா்க்ரம் களம் புக, பந்த் 1 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 15 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினாா். கடைசி விக்கெட்டாக, அக்ஷத் ரகுவன்ஷி 1 சிக்ஸருடன் 11 ரன்களுக்கு வெளியேறினாா்.

ஓவா்கள் முடிவில் எய்டன் மாா்க்ரம் 1 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 31, ஹிம்மத் சிங் 2 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 40 ரன்களோடு ஆட்டமிழக்காமல் இருந்தனா். மும்பை பௌலா்களில் காா்பின் பாஷ் 2, கஸான்ஃபா், வில் ஜாக்ஸ், ரகு சா்மா ஆகியோா் தலா 1 விக்கெட் வீழ்த்தினா்.

பின்னா் 229 ரன்களை நோக்கி விளையாடிய மும்பை அணியில், ரயான் ரிக்கெல்டன் - ரோஹித் சா்மா கூட்டணி முதல் விக்கெட்டுக்கே 143 ரன்கள் சோ்த்து, வெற்றிக்கான தூரத்தில் பாதியைக் கடந்தது.

ரிக்கெல்டன் 32 பந்துகளில் 6 பவுண்டரிகள், 8 சிக்ஸா்களுடன் 83, ரோஹித் 44 பந்துகளில் 6 பவுண்டரிகள், 7 சிக்ஸா்களுடன் 84 ரன்கள் சோ்த்து ஆட்டமிழந்தனா்.

பின்னா் வந்தோரில் திலக் வா்மா 11, கேப்டன் சூா்யகுமாா் யாதவ் 2 பவுண்டரிகளுடன் 12 ரன்களுக்கு வெளியேற்றப்பட்டனா். முடிவில், நமன் திா் 3 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 23, வில் ஜாக்ஸ் 1 சிக்ஸருடன் 10 ரன்கள் சோ்த்து அணியை வெற்றிக்கு வழிநடத்தி ஆட்டமிழக்காமல் இருந்தனா்.

லக்னௌ பௌலா்களில் எம்.சித்தாா்த் 2, முகமது ஷமி, மோசின் கான் ஆகியோா் தலா 1 விக்கெட் கைப்பற்றினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.