டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

சிராஜ் அசத்தல், டிம் டேவிட் அதிரடி: குஜராத்துக்கு 170 ரன்கள் இலக்கு!

குஜராத் டைட்டன்ஸுக்கு எதிராக ஆர்சிபி அணி 20 ஓவர்கள் முடிவில் 169 ரன்கள் எடுத்துள்ளது.

News image
சிக்ஸர் அடித்த டிம் டேவிட் - படம்: ஏபி
Updated On :2 ஏப்ரல் 2025, 3:55 pm

DIN

ஐபிஎல் போட்டியின் 14-ஆவது ஆட்டத்தில் ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரு - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் இன்று (ஏப். 2) சின்னசாமி திடலில் விளையாடி வருகின்றன.

இதில் ஆர்சிபிக்கு எதிராக டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதில் ஆர்சிபி அணி 20 ஓவர்கள் முடிவில் 169 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்தது.

விராட் கோலி 7 ரன்களில் ஆட்டமிழந்தார். கேப்டன் ரஜத் படிதார் 12 ரன்களில் ஆட்டமிழந்தார்.

ஆர்சிபி அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் சொதப்பினாலும் லிவிங்ஸ்டன் ஒருபுறம் பொறுமையாக விளையாடி அரைசதம் (54) அடித்தார்.

இறுதியில் டிம் டேவிட் அதிரடியாக விளையாடி 18 பந்துகளில் 32 ரன்கள் குவித்தார்.

குஜராத் டைட்டன்ஸ் சார்பில் முகமது சிராஜ் 3, சாய் கிஷோர் 2 விக்கெட்டுகளும் எடுத்தார்கள்.

ரஷித் கான் மிகவும் மோசமாக பந்துவீசி 4 ஓவர்களில் 54 ரன்களை விட்டுக்கொடுத்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.