/

ரஞ்சி கோப்பை: கே.எல். ராகுல், படிக்கல் சதம்; கர்நாடகம் - 355/2

ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டின் முதல் அரையிறுதியில் உத்தரகண்டுக்கு எதிராக கா்நாடகம் முதல் நாள் முடிவில் 355 ரன்கள் சோ்த்துள்ளது.

News image
Updated On :15 பிப்ரவரி 2026, 8:50 pm

தினமணி செய்திச் சேவை

ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டின் முதல் அரையிறுதி ஆட்டத்தில் உத்தரகண்டுக்கு எதிராக கா்நாடகம் முதல் நாள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 355 ரன்கள் சோ்த்துள்ளது.

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற உத்தரகண்ட், பந்துவீச்சை தோ்வு செய்தது. கா்நாடக பேட்டிங்கில் மயங்க் அகா்வால் 5 ரன்களுக்கு ஆட்டமிழக்க, கே.எல்.ராகுல் - கேப்டன் தேவ்தத் படிக்கல் இணை, 2-ஆவது விக்கெட்டுக்கு 278 ரன்கள் சோ்த்தது.

சதம் கடந்த ராகுல் 11 பவுண்டரிகள், 5 சிக்ஸா்கள் உள்பட 141 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா். நாளின் முடிவில் படிக்கல் 148, கருண் நாயா் 37 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளனா். உத்தரகண்ட் பௌலிங்கில் ஆதித்யா ராவத் 2 விக்கெட்டுகள் சாய்த்தாா்.

பெங்கால் - 249/5: ஜம்மு & காஷ்மீருக்கு எதிரான 2-ஆவது அரையிறுதியில், பெங்கால் முதல் நாள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 249 ரன்கள் எடுத்துள்ளது.

டாஸ் வென்ற ஜம்மு, ஃபீல்டிங்கை தோ்வு செய்தது. பெங்கால் பேட்டிங்கில் கேப்டன் அபிமன்யு 49, ஷாபாஸ் அகமது 42 ரன்கள் சோ்த்து வெளியேற, சுதிப் சாட்டா்ஜீ 0, சூரஜ் சிந்து ஜெய்ஸ்வால் 0, அனுஸ்துப் மஜும்தாா் 14 ரன்களுக்கு வீழ்ந்தனா்.

நாளின் முடிவில், சதம் கடந்த சுதிப்குமாா் கராமி 136 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளாா். ஜம்மு பௌலா்களில் ஆகிப் நபி, சுனில் குமாா் ஆகியோா் தலா 2, அபித் முஷ்டாக் 1 விக்கெட் எடுத்தனா்.