டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

சோஃபி டிவைன் அரைசதம்; யுபி வாரியர்ஸுக்கு 154 ரன்கள் இலக்கு!

மகளிர் பிரீமியர் லீக் தொடரில் யுபி வாரியர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய குஜராத் ஜெயண்ட்ஸ் அணி 153 ரன்கள் எடுத்துள்ளது.

News image
- படம் | மகளிர் பிரீமியர் லீக் (எக்ஸ்)
Updated On :22 ஜனவரி 2026, 4:26 pm

இணையதளச் செய்திப் பிரிவு

மகளிர் பிரீமியர் லீக் தொடரில் யுபி வாரியர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய குஜராத் ஜெயண்ட்ஸ் அணி 153 ரன்கள் எடுத்துள்ளது.

மகளிர் பிரிமீயர் லீக் தொடரில் வதோதராவில் இன்று (ஜனவரி 22) நடைபெற்று வரும் போட்டியில் யுபி வாரியர்ஸ் மற்றும் குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற யுபி வாரியர்ஸ் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, குஜராத் ஜெயண்ட்ஸ் அணி முதலில் பேட் செய்தது.

அரைசதம் விளாசிய சோஃபி டிவைன்

முதலில் விளையாடிய குஜராத் ஜெயண்ட்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 153 ரன்கள் எடுத்துள்ளது.

அந்த அணியில் அதிகபட்சமாக சோஃபி டிவைன் அரைசதம் எடுத்தார். அவர் 42 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார். அதில் 2 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, பெத் மூனி 38 ரன்களும், டேனி வியாட் ஹாட்ஜ் மற்றும் அனுஷ்கா சர்மா தலா 14 ரன்களும் எடுத்தனர்.

யுபி வாரியர்ஸ் தரப்பில் கிராந்தி கௌட் மற்றும் சோஃபி எக்கல்ஸ்டோன் தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினர். தீப்தி சர்மா மற்றும் சோல் டிரையான் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

154 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி யுபி வாரியர்ஸ் அணி விளையாடி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.