இது பவுலர்களுக்கான தேசம் அல்ல: அஸ்வின் வேதனை
நெஹ்ரா, இந்தியாவின் சிறந்த பவுலர்களில் ஒருவர். ச்இந்தியாவில் மிகச்சுலபமாக பவுலர்களைக் குறைவாக மதிப்பிட்டு விடுகிறோம்.


இந்த ஐபிஎல், அஸ்வினுக்கு இரண்டு விதமான அனுபவங்களைத் தந்துள்ளது. சென்னையில் நடைபெற்ற ஐபிஎல்-லில் மிகச்சிறப்பாக பந்துவீசிய அஸ்வின், வெளியூர்களில் தடுமாறினார். 3 வெளியூர் போட்டிகளில் 4 ஓவர்களை மட்டுமே வீசினார். இதனால் அஸ்வின் அணியிலிருந்து நீக்கப்படுவார் என்கிற பேச்சுகூட எழுந்தது.
வெளியூர் போட்டிகளில் சரியாக திறமையை வெளிப்படுத்தாததைப் பற்றி அஸ்வின் கூறும்போது:
ஒவ்வொரு போட்டியிலும் 4 ஓவர்கள் வீச விரும்புகிறேன். ஆனால் அணியில் 6 பவுலர்கள் உள்ளதால் மேட்சின் சூழலைப் பொறுத்துதான் எத்தனை ஓவர்கள் வீசமுடியும் என்பது முடிவெடுக்கப்படும். வேகப்பந்து வீச்சாளர்கள் நன்றாக வீசினால் முதல் 10 ஓவர்களில் ஒரு ஓவரும் கிடைக்காது. கடைசி 10 ஓவர்களில் நான்கு ஓவர்கள் வீசுவதும் கடினம். நான் எப்படிப் பந்துவீச நினைக்கிறேனோ அதுபோல பந்துவீசவேண்டும். என் கையிலிருந்து பந்து அருமையாக வெளியேறுகிறது. அதனால் ஒவ்வொருமுறை பந்துவீசும்போதும் விக்கெட்டுகள் எடுக்க நினைக்கிறேன்.
சிஎஸ்கே அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் நன்கு பந்துவீசுவது பற்றி?
இந்திய பவுலர்கள் வெளிநாடுகளில் நன்கு பந்துவீசுவதற்காக இந்தமுறை ஆடுகளத்தில் நிறைய புற்களை விட்டுவைத்திருக்கிறார்கள். அதனால் ஆடுகளங்கள் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு உதவுகின்றன. இது சுழற்பந்து வீச்சாளர்களுக்குச் சவாலாக உள்ளது. இதனால் இந்த ஐபிஎல்-லில் ஸ்பின்னர்கள் விக்கெட்டுகள் எடுத்தாலும் 35,40 ரன்களை விட்டுக்கொடுத்துள்ளார்கள். இதுவரை அப்படியொரு நிலைதான் உள்ளது.
ஆஷிஷ் நெஹ்ரா பற்றி?
நான் இந்திய அணிக்கு 2009-ல் அறிமுகமானபோது அவர்தான் முன்னணி பவுலராக இருந்தார். இந்தியாவில் மிகச்சுலபமாக பவுலர்களைக் குறைவாக மதிப்பிடுகிறோம். இது பவுலர்களுக்கான தேசம் அல்ல. பவுலர்களைப் புரிந்துகொள்வது கடினம். பேட்ஸ்மேனை விடவும் பவுலரைச் சுலபமாக மதிப்பிடுகிறோம். அதனால் தான் ஒரு நல்ல பவுலரைக் குறைவாக எடைபோட்டுவிடுகிறோம். நெஹ்ரா, இந்தியாவின் சிறந்த பவுலர்களில் ஒருவர். 2011 உலகக் கோப்பையை வெல்ல அவர் அச்சாணியாக இருந்தார். அவர் எப்போதும் கோபப்படமாட்டார். பவர் பிளேயாக இருந்தாலும் கடைசி ஓவர்களாக இருந்தாலும் டிவில்லியஸ், யுவ்ராஜ் என எந்த பேட்ஸ்மேனாக இருந்தாலும் புகார் கூறாமல் நூறு சதவீத ஈடுபாட்டுடன் பவுலிங் செய்வார். அவர் இடது கை வேகப்பந்து வீச்சாளராக இருப்பதால் அப்படியொரு பவுலரை எல்லா அணிகளும் விரும்புவார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...