பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வானை டெஸ்ட் போட்டியில் வங்கதேச வீரர்கள், ”பாலிவுட் நடிகர், இந்த ஓவர் ஆக்டிங்கிற்கு (அதீத நடிப்புக்கு) 50 பைசா கட் செய்யப்படும்...” என மிகவும் கடுமையாக கிண்டல் செய்தார்கள்.
சொந்த மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணியை முதல்முறையாக ஒயிட்வாஷ் (2-0) செய்து வங்கதேச அணி வரலாற்றுச் சாதனை நிகழ்த்தியிருக்கிறது.
சில்ஹெட்டில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட்டில் நான்காவது நாளில்தான் இந்த சம்பவங்கள் நடைபெற்றது. ஒரு சினிமா போல வங்கதேச வீரர்கள் முகமது ரிஸ்வானைக் கேலி செய்தே ஆட்டமிழக்க வைத்தார்கள்.
இரண்டாவது இன்னிங்ஸில் 437 ரன்களை சேஸ் செய்தால் வெற்றி என்ற நிலையில் பாகிஸ்தான் அணிக்கு நம்பிக்கையூட்டி வந்தார் முகமது ரிஸ்வான்.
அரைசதம் கடந்திருந்த முகமது ரிஸ்வான் 72ஆவது ஓவரில் சைடு ஸ்கிரீனில் நபர்கள் இருப்பதால் அவர்களை நகரும்படி பந்துவீசுவதை தாமதப்படுத்துவார். இதனால் எரிச்சலடைந்த வங்கதேச வீரர்கள் முகமது ரிஸ்வானை கிண்டல் செய்ய ஆரம்பித்தனர்.
வங்கதேச விக்கெட் கீப்பர் லிட்டன் தாஸ் இதனை தொடங்கி வைத்தார். பின்ன ரிஸ்வான் நடுவரிடம் முறையிட்டார். பின்னர் அந்த நாள் ஆட்டம் முடிவடைந்தது. அங்கு நடந்த கேலி கிண்டல் உரையாடல் பின்வருமாறு...
லிட்டன் தாஸ்: என்ன செய்கிறாய்?
ரிஸ்வான்: அங்கு பார், ஆட்கள் இருக்கிறார்கள்.
லிட்டன் தாஸ்: நீ ஏன் அங்கு பார்க்கிறாய்? உனது பேட்டிங்கில் கவனம் செலுத்து.
வங்கதேச வீரர்: அரைசதம் அடித்து விட்டாய். அதனால், உனது நாடகத்தைத் தொடங்கிவிட்டாய்.
ஷாண்டோ: இதுமாதிரி ஓவர் ஆக்டிங் செய்தால் 50 பைசா குறைக்கப்படும்.
மற்றுமொரு வங்கதேச வீரர்: அவர் நன்றாகத்தான் நடிக்கிறார். எல்லோருக்கும் கற்றுத்தருகிறார்.
வங்கதேச வீரர்: கவலை வேண்டாம் நண்பா, அவர் நிச்சயமாக பாலிவுட்டில் செட்டில் ஆகுவார்.
வங்கதேச வீரர்: இல்லை, இல்லை, அவருக்கு எல்லாம் அங்கு இடமிருக்காது எனக் கேலியால் வறுத்தெடுத்தார்கள்.
இறுதியில் ஐந்தாம் நாளில் முகமது ரிஸ்வான் 94 ரன்களில் ஆட்டமிழந்தார். பாகிஸ்தான் அணி 78 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. கடைசிவரை போராடினாலும் வங்கதேச வீரர்கள் தங்களது மண்ணில் ஆதிக்கத்தை நிலைநாட்டினார்கள்.
Summary
Mohammad Rizwan in Bollywood? Litton Das, Bangladesh teammates troll Pakistan star
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









