தமிழ் செய்திகள்
பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் வங்கதேச அணி தனது முதல் இன்னிங்ஸ் 413 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
வங்கதேசத்துக்கு சுற்றுப் பயணம் செய்துள்ள பாகிஸ்தான் அணி 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் டாக்காவில் நேற்று (மே.8) தொடங்கியது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இரண்டாம் நாளான இன்று வங்க தேசம் 117.1 ஓவர்களில் 413 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதில் நஜ்முல் ஹொசைன் ஷண்டோ சதம் அடித்து அசத்தினார்.
முஷ்ஃபிகுர் ரஹிம் 71 ரன்கள் எடுத்தார். பாகிஸ்தான் சார்பில் முகமது அப்பாஸ் 5 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார். ஷாஹீன் ஷா அஃப்ரிடி 3 விக்கெட்டுகளும் எடுத்தார்.
தற்போது, பாகிஸ்தான் தனது முதல் இன்னிங்ஸில் 10 ஓவர்களில் 50 ரன்கள் ஆட்டமிழக்காமல் எடுத்துள்ளது.
Summary
Bangladesh 413 runs all out in first test against Pakistan.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.







