தமிழ் செய்திகள்
பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 104 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசம் அபார வெற்றி பெற்றது.
வங்கதேசம் - பாகிஸ்தான் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி டாக்காவில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் பாகிஸ்தானை 104 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வங்கதேசம் அபார வெற்றி பெற்றது.
வங்கதேசம் முதல் இன்னிங்ஸில் 413 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இரண்டாவது இன்னிங்ஸில் 9 விக்கெட்டுகளை இழந்து 240 ரன்கள் எடுத்திருந்தபோது டிக்ளேர் செய்தது. பாகிஸ்தானுக்கு வங்கதேசம் 268 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.
268 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடிய பாகிஸ்தான் அணி, 163 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம், 104 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் தோல்வியடைந்தது.
அந்த அணியில் இரண்டாவது இன்னிங்ஸில் அப்துல்லா ஃபஸல் 113 பந்துகளில் 66 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து, சல்மான் அகா 26 ரன்களும், அஸான் அவைஸ், சௌத் ஷகீல் மற்றும் முகமத் ரிஸ்வான் தலா 15 ரன்கள் எடுத்தனர்.
வங்கதேசம் தரப்பில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய நஹித் ராணா 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். டஸ்கின் அகமது மற்றும் தைஜுல் இஸ்லாம் தலா இரண்டு விக்கெட்டுகளையும், மெஹிதி ஹாசன் மிராஸ் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
இந்த வெற்றியின் மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் வங்கதேசம் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
Summary
Bangladesh achieved a magnificent victory over Pakistan by a margin of 104 runs in the first Test match.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









