40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

கடைசி டி20: வங்கதேசத்தை வீழ்த்தி தொடரை சமன் செய்த நியூசிலாந்து!

வங்கதேசத்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் நியூசிலாந்து அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

News image

படம் | நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் (எக்ஸ்)

Updated On :2 மே 2026, 6:41 pm IST

வங்கதேசத்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் நியூசிலாந்து அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

வங்கதேசம் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி டாக்காவில் இன்று (மே 2) நடைபெற்றது. இந்தப் போட்டியில் நியூசிலாந்து அணி டக்வொர்த் லீவிஸ் விதிப்படி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இரு அணிகளுக்கும் இடையிலான இந்த ஆட்டம் மழை காரணமாக 15 ஓவர்களாக குறைத்து நடத்தப்பட்டது. முதலில் விளையாடிய வங்கதேசம் 14.2 ஓவர்களில் 102 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

அந்த அணியில் அதிகபட்சமாக தௌஹித் ஹிரிடாய் 33 ரன்களும், கேப்டன் லிட்டன் தாஸ் 26 ரன்களும் எடுத்தனர். சைஃப் ஹாசன் 16 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர்.

நியூசிலாந்து தரப்பில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய ஜோஷ் கிளார்க்சன் மூன்று விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். நாதன் ஸ்மித் மற்றும் பென் சியர்ஸ் தலா இரண்டு விக்கெட்டுகளையும், ஜேடன் லென்னாக்ஸ் மற்றும் ஈஷ் சோதி தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

பெவான் ஜேக்கோப்ஸ் அரைசதம்; டி20 தொடரை சமன் செய்த நியூசிலாந்து!

103 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய நியூசிலாந்து அணி, 11.4 ஓவர்களில் இலக்கை எட்டி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தியது.

நியூசிலாந்து அணியில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய பெவான் ஜேக்கோப்ஸ் அதிகபட்சமாக 31 பந்துகளில் 62 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். அதில் 5 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, டிம் ராபின்சன் 23 ரன்களும், டீன் ஃபாக்ஸ்கிராஃப்ட் 15 ரன்களும் எடுத்தனர்.

வங்கதேசம் தரப்பில் ஷோரிஃபுல் இஸ்லாம் மூன்று விக்கெட்டுகளையும், மஹேதி ஹாசன் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை நியூசிலாந்து அணி 1-1 என்ற கணக்கில் சமன் செய்தது.

Summary

New Zealand won the third T20 match against Bangladesh by 6 wickets.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.