தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

இந்த சீசனில் இஷான் கிஷனின் சிறந்த ஆட்டம் இதுதான்; உதவிப் பயிற்சியாளர் பாராட்டு!

சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணிக்கு வெற்றி பெற்றுத் தந்த இஷான் கிஷனை அந்த அணியின் உதவிப் பயிற்சியாளர் பாராட்டியுள்ளார்.

News image

பந்தை பவுண்டரிக்கு விரட்டும் இஷான் கிஷன் - படம் | ஐபிஎல் (எக்ஸ்)

Updated On :19 மே 2026, 4:36 pm IST

சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணிக்கு வெற்றி பெற்றுத் தந்த இஷான் கிஷனை அந்த அணியின் உதவிப் பயிற்சியாளர் ஜேம் பிராங்க்ளின் பாராட்டியுள்ளார்.

ஐபிஎல் தொடரில் சென்னை சேப்பாக்கம் திடலில் நேற்று (மே 18) நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் வெற்றி பெற்றது. மேலும், பிளே ஆஃப் சுற்றுக்கும் தகுதி பெற்றது.

இந்தப் போட்டியில் சன்ரைசர்ஸ் தரப்பில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இஷான் கிஷன் 47 பந்துகளில் 70 ரன்கள் எடுத்து அசத்தினார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவருக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.

இந்த நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிராக நேற்றையப் போட்டியில் இஷான் கிஷன் விளையாடிய ஆட்டமே இந்த சீசனில் அவரது சிறந்த ஆட்டம் என சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் உதவிப் பயிற்சியாளர் ஜேம்ஸ் பிராங்க்ளின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: இந்த தொடர் முழுவதுமே இஷான் கிஷன் மிகவும் சிறப்பாக செயல்பட்டுள்ளார் என நினைக்கிறேன். அண்மைக் காலமாக அவர் இந்திய அணிக்காகவும் மிகவும் நன்றாக விளையாடியுள்ளார். இந்திய அணிக்காக சிறப்பான ஃபார்மில் விளையாடிய இஷான் கிஷன், அதனை ஐபிஎல் தொடரிலும் தொடர்ந்துள்ளார். நடப்பு ஐபிஎல் தொடரில் இஷான் கிஷனின் சிறந்த இன்னிங்ஸ் எது என்று என்னிடம் கேட்டால், சிஎஸ்கேவுக்கு எதிராக சேப்பாக்கத்தில் விளையாடிய இந்த ஆட்டத்தையே நான் கூறுவேன் என்றார்.

நேற்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் தோல்வியடைந்ததன் மூலம் அந்த அணிக்கான பிளே ஆஃப் வாய்ப்பு கிட்டத்தட்ட எட்டாக்கனியாகவே மாறிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Summary

The team's assistant coach has praised Ishan Kishan for delivering an excellent performance in the match against the Chennai Super Kings and securing a victory for the team.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.