திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு!

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டி மற்றும் ஒருநாள் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ இன்று (மே 19) அறிவித்துள்ளது.

News image

இந்திய அணி வீரர்கள் (கோப்புப் படம்)

Updated On :19 மே 2026, 5:45 pm IST

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டி மற்றும் ஒருநாள் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ இன்று (மே 19) அறிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தான் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒரு டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் போட்டி முதலில் நடைபெறுகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் போட்டி வருகிற ஜூன் 6 ஆம் தேதி தொடங்குகிறது. அதன் பின், ஒருநாள் தொடர் நடைபெறுகிறது.

இந்த நிலையில், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டி மற்றும் ஒருநாள் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ இன்று (மே 19) அறிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் துணைக் கேப்டனாக கே.எல்.ராகுல் நியமிக்கப்பட்டுள்ளார். டெஸ்ட் போட்டிகளுக்கான துணைக் கேப்டன் பொறுப்பிலிருந்து ரிஷப் பந்த் நீக்கப்பட்டுள்ளார். மேலும், ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் ரிஷப் பந்த்தின் பெயர் இடம்பெறவில்லை.

டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகள் என இரண்டிலுமே ஜஸ்பிரித் பும்ரா இடம்பெறவில்லை. வேலைப்பளு காரணமாக அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரவீந்திர ஜடேஜாவும் அணியில் இடம்பெறவில்லை.

ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டு வரும் வீரர்களான மானவ் சுதர், குர்னூர் பிரார் முதல் முறையாக டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் இடம்பெற்றுள்ளனர். ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணியில் லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் வேகப் பந்துவீச்சாளர் பிரின்ஸ் யாதவ் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி விவரம்

ஷுப்மன் கில் (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல், சாய் சுதர்சன், ரிஷப் பந்த், தேவ்தத் படிக்கல், நிதீஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, மானவ் சுதர், குர்னூர் பிரார், ஹர்ஷ் துபே, துருவ் ஜுரெல்.

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி விவரம்

ஷுப்மன் கில் (கேப்டன்), ரோஹித் சர்மா, விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர் (துணைக் கேப்டன்), கே.எல்.ராகுல், இஷான் கிஷன், ஹார்திக் பாண்டியா, நிதீஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா, பிரின்ஸ் யாதவ், குர்னூர் பிரார், ஹர்ஷ் துபே.

Summary

The BCCI has announced the Indian squad for the Test match and ODI series against Afghanistan today.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.