இந்திய அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனி ஐபிஎல் தொடரில் இன்றுடன் ஓய்வு பெறவுள்ளதாகக் கூறப்படுகிறது.
ஐபிஎல் தொடரின் 19-வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நடப்பு சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதல் அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. மீதமுள்ள மூன்று இடங்களுக்கு கடும் போட்டி நிலவுகிறது.
இந்த நிலையில், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனி இன்றுடன் ஐபிஎல் தொடரிலிருந்து ஓய்வு பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
காயம் காரணமாக நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை தோனி ஒரு போட்டியில்கூட விளையாடவில்லை. இந்த நிலையில், சென்னை சேப்பாக்கம் திடலில் இன்று (மே 18) நடைபெறும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டியில் தோனி விளையாடவுள்ளதாகவும், இதுவே ஐபிஎல் தொடரில் தோனி விளையாடும் கடைசி போட்டி எனவும் சமூக வலைத்தளங்களில் வேகமாக செய்திகள் பரவி வருகின்றன.
இருப்பினும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் தரப்பில் இது தொடர்பாக எந்தவொரு அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Summary
Regarding whether former Indian captain Mahendra Singh Dhoni is retiring from the IPL series today.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தோனி சொன்னதும் செய்ததும்... சிரிப்பலையை ஏற்படுத்தும் ஷேன் வாட்சன் விடியோ!
காயம் காரணமாக வீடு திரும்பிய எம்.எஸ். தோனி..! கடைசி போட்டியிலும் விளையாடவில்லை!
நம்பிக்கை, அதீத நம்பிக்கை... டெவால்டு பிரெவிஸுக்கு எம்.எஸ். தோனி பகிர்ந்த அறிவுரை!








