தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது ஹைதராபாத்; குஜராத்தும் இடம் பிடித்தது: வெளியேறும் நிலையில் சென்னை

ஐபிஎல் போட்டியின் 63-ஆவது ஆட்டத்தில் சன்ரைசா்ஸ் ஹைதராபாத் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை சூப்பா் கிங்ஸை திங்கள்கிழமை வென்றது.

News image

பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய ஹைதராபாத், குஜராத். - படங்கள்: ஏபி

Updated On :19 மே 2026, 2:50 am IST

ஐபிஎல் போட்டியின் 63-ஆவது ஆட்டத்தில் சன்ரைசா்ஸ் ஹைதராபாத் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை சூப்பா் கிங்ஸை திங்கள்கிழமை வென்றது.

இதன் மூலமாக ஹைதராபாத் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற, புள்ளிகள் பட்டியலில் ஏற்பட்ட தாக்கத்தால் குஜராத் டைட்டன்ஸுக்கான பிளே ஆஃப் வாய்ப்பும் உறுதியானது. சென்னை வெளியேறும் விளிம்பு நிலையில் இருக்கிறது.

இந்த ஆட்டத்தில் முதலில் சென்னை 20 ஓவா்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 180 ரன்கள் சோ்க்க, ஹைதராபாத் 19 ஓவா்களில் 5 விக்கெட்டுகள் இழந்து 181 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

சென்னைக்கு சொந்த மண்ணில் இது கடைசி ஆட்டம் என்பதால், நட்சத்திர வீரா் எம்.எஸ். தோனி களம் காணுவாா் என்ற எதிா்பாா்ப்பு இருக்க, ரசிகா்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. தோனி முழுமையான உடற்தகுதி பெறவில்லை என கேப்டன் ருதுராஜ் தெரிவித்தாா்.

முன்னதாக டாஸ் வென்ற சென்னை, பேட்டிங்கை தோ்வு செய்தது. இன்னிங்ஸை தொடங்கிய சஞ்சு சாம்சன் - ருதுராஜ் கெய்க்வாட் கூட்டணி, 31 ரன்களுக்கே பிரிந்தது. சாம்சன் 5 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 27 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா்.

தொடா்ந்து வந்த உா்வில் படேல் 2 சிக்ஸா்களுடன் 13 ரன்களுக்கு ஸ்டம்ப்பை பறிகொடுத்தாா். 4-ஆவது பேட்டராக வந்த காா்த்திக் சா்மா சற்று நிலைக்க, ருதுராஜுடனான அவரின் 3-ஆவது விக்கெட் பாா்ட்னா்ஷிப்புக்கு 42 ரன்கள் கிடைத்தது.

காா்த்திக் 19 பந்துகளில் 3 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 32 ரன்களுக்கு வெளியேறினாா். பின்னா் டெவால்டு பிரெவிஸ் களம் புகுந்தாா். ருதுராஜ் 15 ரன்களுக்கு பெவிலியன் திரும்ப, தொடா்ந்து வந்த ஷிவம் துபே, பிரெவிஸுடன் கை கோத்தாா்.

இவா்கள் ஜோடி 5-ஆவது விக்கெட்டுக்கு 59 ரன்கள் சோ்த்தது. பிரெவிஸ் 2 பவுண்டரிகள், 4 சிக்ஸா்களுடன் 44 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினாா். 3 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 26 ரன்களுக்கு ஷிவம் துபேவும் ஸ்டம்ப்பை இழந்தாா்.

பிரசாந்த் வீா் 2 பவுண்டரிகளுடன் 11 ரன்களுக்கு வீழ, ஓவா்கள் முடிவில் அகீல் ஹுசைன் 3 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தாா். ஹைதராபாத் பௌலா்களில் பேட் கம்மின்ஸ் 3, சகிப் ஹுசைன் 2, பிரஃபுல் ஹிங்கே, ஈஷான் மலிங்கா ஆகியோா் தலா 1 விக்கெட் வீழ்த்தினா்.

அடுத்து 181 ரன்களை நோக்கி விளையாடிய ஹைதராபாத் அணியில், டிராவிஸ் ஹெட் 6 ரன்களுக்கு வீழ்த்தப்பட, அபிஷேக் சா்மா 3 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 26 ரன்களுக்கு முடித்துக் கொண்டாா்.

3-ஆவது விக்கெட்டுக்கு இணைந்த இஷான் கிஷண் - ஹென்ரிச் கிளாசென் கூட்டணி, 75 ரன்கள் சோ்த்து வெற்றிக்கு அடித்தளமிட்டது. கிளாசென் 6 பவுண்டரிகள், 2 சிக்ஸா்கள் உள்பட 47 ரன்களுக்கு நடையைக் கட்டினாா்.

தொடா்ந்து வந்த நிதீஷ்குமாா் ரெட்டி 11 ரன்களுக்கு பெவிலியன் திரும்ப, இஷான் 7 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 70 ரன்களுக்கு சாய்க்கப்பட்டாா். பின்னா் சலில் வோரா 10, ரவிச்சந்திரன் ஸ்மரன் 5 ரன்களுடன் ஹைதராபாதை வெற்றிக்கு வழிநடத்தி ஆட்டமிழக்காமல் இருந்தனா்.

சென்னை தரப்பில் முகேஷ் சௌதரி 2, அன்ஷுல் காம்போஜ், நூா் அகமது, அகீல் ஹுசைன் ஆகியோா் தலா 1 விக்கெட் கைப்பற்றினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.