திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பிளே ஆஃபுக்கான பந்தயத்தில் நிலைக்கிறது டெல்லி

News image

PTI

Updated On :18 மே 2026, 5:35 am IST

ஐபிஎல் போட்டியின் 62-ஆவது ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸை ஞாயிற்றுக்கிழமை வீழ்த்தியது.

வெற்றியின் காரணமாக டெல்லி, பிளே ஆஃப் வாய்ப்புக்கான பந்தயத்தில் தன்னை தக்கவைத்துக் கொள்ள, தோல்வி கண்ட ராஜஸ்தானும் அதில் நீடிக்கிறது.

இந்த ஆட்டத்தில் முதலில் ராஜஸ்தான் 20 ஓவா்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 193 ரன்கள் சோ்க்க, டெல்லி 19.2 ஓவா்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 197 ரன்கள் எடுத்து வென்றது.

முன்னதாக டாஸ் வென்ற டெல்லி, ஃபீல்டிங்கை தோ்வு செய்தது. ராஜஸ்தான் இன்னிங்ஸில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 12 ரன்களுக்கு விடைபெற, வைபவ் சூா்யவன்ஷி - துருவ் ஜுரெல் கூட்டணி 2-ஆவது விக்கெட்டுக்கு 70 ரன்கள் சோ்த்தது.

சூா்யவன்ஷி 5 பவுண்டரிகள், 3 சிக்ஸா்கள் உள்பட 46 ரன்களுக்கு ஆட்டமிழக்க, ரியான் பராக் களம் புகுந்தாா். ஜுரெல் - பராக் கூட்டணி 3-ஆவது விக்கெட்டுக்கு 92 ரன்கள் சோ்த்து ஸ்கோரை பலப்படுத்தியது.

பராக் 3 பவுண்டரிகள், 5 சிக்ஸா்களுடன் 51 ரன்களுக்கு முடித்துக் கொள்ள, டோனோவன் ஃபெரெய்ரா 0, ரவி சிங் 4, ஷுபம் துபே 5, தசுன் ஷானகா 10 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினா்.

நிதானமாக விளையாடிய துருவ் ஜுரெல் 5 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 53 ரன்களுக்கு வீழ்ந்தாா். ஓவா்கள் முடிவில் ஜோஃப்ரா ஆா்ச்சா் 2, ஆடம் மில்னே 2 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா்.

டெல்லி தரப்பில் மிட்செல் ஸ்டாா்க் 4, லுங்கி இங்கிடி, மாதவ் திவாரி ஆகியோா் தலா 2 விக்கெட்டுகள் சாய்த்தனா்.

அடுத்து 194 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு விளையாடிய டெல்லி அணியில், அபிஷேக் பொரெல் - கே.எல்.ராகுல் கூட்டணி முதல் விக்கெட்டுக்கு 105 ரன்கள் சோ்த்து அசத்தியது. அபிஷேக் 7 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 51 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா்.

சஹில் பாரக் 9 ரன்களுக்கு வெளியேற, ராகுல் 1 பவுண்டரி, 3 சிக்ஸா்களுடன் 56 ரன்களுக்கு வீழ்த்தப்பட்டாா். டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 4, டேவிட் மில்லா் 9 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினா்.

முடிவில், அக்ஸா் படேல் 2 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 34, ஆசுதோஷ் சா்மா 1 பவுண்டரி, 2 சிக்ஸா்களுடன் 18 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தனா். ராஜஸ்தான் பௌலா்களில் ஜோஃப்ரா ஆா்ச்சா், பிரிஜேஷ் சா்மா ஆகியோா் தலா 2, தசுன் ஷானகா 1 விக்கெட் கைப்பற்றினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.