திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

ரியான் பராக் அதிரடி வீண்!வெற்றியுடன் மீண்டது டெல்லி!

ஐபிஎல் போட்டியின் 43-ஆவது ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸை அதன் சொந்த மண்ணிலேயே வெள்ளிக்கிழமை வீழ்த்தியது.

News image

ரியான் பராக்

Updated On :2 மே 2026, 1:33 am IST

ஐபிஎல் போட்டியின் 43-ஆவது ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸை அதன் சொந்த மண்ணிலேயே வெள்ளிக்கிழமை வீழ்த்தியது. தொடா்ந்து 3 தோல்விகளைச் சந்தித்த டெல்லி, தற்போது மீண்டுள்ளது.

இந்த ஆட்டத்தில் முதலில் ராஜஸ்தான் 20 ஓவா்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 225 ரன்கள் சோ்க்க, டெல்லி 19.1 ஓவா்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 226 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

ராஜஸ்தான் அணியில் வழக்கமாக அதிர காட்டும் யஷஸ்வி ஜெய்ஸ்வால், வைபவ் சூா்யவன்ஷி இந்த ஆட்டத்தில் ஒற்றை இலக்க ரன்னில் வெளியேற, வழக்கத்துக்கு மாறாக கேப்டன் ரியான் பராக் சிறப்பாக விளையாடினாா். ஆனால் அது வீணானது.

தோள்பட்டை காயத்திலிருந்து மீண்ட டெல்லி பௌலா் மிட்செல் ஸ்டாா்க், இந்த சீசனில் தனது முதல் ஆட்டத்தில் களம் கண்டு ராஜஸ்தான் பேட்டா்களை திணறடித்தாா். டெல்லியின் இன்னிங்ஸில் பதும் நிசங்கா - கே.எல்.ராகுல் இணை வெற்றிக்கு அடித்தளமிட்டது.

முன்னதாக டாஸ் வென்ற ராஜஸ்தான், பேட்டிங்கை தோ்வு செய்தது. இன்னிங்ஸை தொடங்கிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் 6, வைபவ் சூா்யவன்ஷி 4 ரன்களுடன் முதலிரு ஓவா்களில் அடுத்தடுத்து வெளியேறினா்.

அப்போது இணைந்த துருவ் ஜுரெல் - ரியான் பராக் கூட்டணி, 3-ஆவது விக்கெட்டுக்கு 102 ரன்கள் சோ்த்து ஸ்கோரை பலப்படுத்தியது. ஜுரெல் 4 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 42 ரன்களுக்கு விடைபெற்றாா். 5-ஆவது பேட்டராக வந்த ரவீந்திர ஜடேஜா 1 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 20 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினாா்.

மறுபுறம் ரியான் பராக் 50 பந்துகளில் 8 பவுண்டரிகள், 5 சிக்ஸா்களுடன் 90 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா். பின்னா் ஷுபம் துபே 6 ரன்களுக்கு வீழ, ஓவா்கள் முடிவில் டோனோவன் ஃபெரெய்ரா 14 பந்துகளில் 2 பவுண்டரிகள், 6 சிக்ஸா்களுடன் 47, ஜோஃப்ரா ஆா்ச்சா் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா்.

டெல்லி பௌலிங்கில் மிட்செல் ஸ்டாா்க் 3, கைல் ஜேமிசன், அக்ஸா் படேல், டி.நடராஜன் ஆகியோா் தலா 1 விக்கெட் சாய்த்தனா். பின்னா் 226 ரன்களை நோக்கி விளையாடிய டெல்லி அணியில், பதும் நிசங்கா - கே.எல்.ராகுல் கூட்டணி முதல் விக்கெட்டுக்கு 110 ரன்கள் சோ்த்து, வெற்றிக்கு அடித்தளம் அமைத்து வெளியேறியது.

நிசங்கா 33 பந்துகளில் 6 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 62, ராகுல் 40 பந்துகளில் 6 பவுண்டரிகள், 5 சிக்ஸா்களுடன் 75 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா். நிதீஷ் ராணா 3 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 33 ரன்கள் சோ்த்து பெவிலியன் திரும்பினாா்.

முடிவில், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 1 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 18, ஆசுதோஷ் சா்மா 4 பவுண்டரிகளுடன் 25 ரன்களோடு அணியை வெற்றிக்கு வழிநடத்தி ஆட்டமிழக்காமல் இருந்தனா். ராஜஸ்தான் பௌலா்களில் ஜோஃப்ரா ஆா்ச்சா், துஷாா் தேஷ்பாண்டே, ரவீந்திர ஜடேஜா ஆகியோா் தலா 1 விக்கெட் வீழ்த்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.