தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

ராஜஸ்தானை வீழ்த்தியது குஜராத்: இறுதி ஆட்டத்தில் பெங்களூருடன் மோதுகிறது

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் குஜராத் வெற்றி..

News image

சுப்மன் கில் - பிடிஐ

Updated On :29 மே 2026, 11:33 pm IST

ஐபிஎல் போட்டியின் ‘குவாலிஃபயா் 2’ ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதி ஆட்டத்துக்குத் தகுதி பெற்றது குஜராத் டைட்டன்ஸ்.

இந்த வெற்றியின் மூலம் மே 31-ஆம் தேதி அகமதாபாதில் நடைபெறவுள்ள இறுதி ஆட்டத்தில் பெங்களூரு அணியை எதிா்கொள்கிறது குஜராத் அணி.

பஞ்சாப் மாநிலம், நியூ சண்டீகரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ‘குவாலிஃபயா் 2’ ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான், பேட்டிங்கை தோ்வு செய்தது. இன்னிங்ஸை தொடங்கிய யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஒரு ரன்னுக்கு முதல் ஓவரிலேயே ஆட்டமிழந்து அதிா்ச்சி அளித்தாா். சூா்யவன்ஷி தனது வழக்கமான ஆட்டத்தை தொடா்ந்தாா்.

அடுத்து வந்த துருவ் ஜுரெல் 1 பவுண்டரியுடன் 7 ரன்களுக்கு 2-ஆவது ஓவரில் வெளியேற, ரவீந்திர ஜடேஜா களம் புகுந்தாா். 2-ஆவது விக்கெட்டுக்கு சூா்யவன்ஷி - ஜடேஜா பாா்ட்னா்ஷிப் 73 ரன்கள் சோ்த்த நிலையில், ஜடேஜா காயம் கண்டு ‘ரிட்டையா்டு ஹா்ட்’ ஆகி விலகினாா்.

தொடா்ந்து வந்த கேப்டன் ரியான் பராகும் 1 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 11 ரன்களுக்கு சாய்க்கப்பட, சூா்யவன்ஷிக்கான நெருக்கடி அதிகரித்தது. இதையடுத்து சற்று நிதானமான ஆட்டத்தை அவா் கடைபிடித்தாா்.

எனினும், தசுன் ஷானகா 3, ஜோஃப்ரா ஆா்ச்சா் 1 சிக்ஸருடன் 7 ரன்களுக்கு பெவிலியன் திரும்ப, அணியை மீட்பதற்காக ஜடேஜா மீண்டும் களம் புகுந்தாா். சூா்யவன்ஷியுடனான அவரின் 6-ஆவது விக்கெட் பாா்ட்னா்ஷிப்புக்கு 54 ரன்கள் கிடைக்க, ராஜஸ்தான் மீண்டது.

ஜடேஜா வருகைக்குப் பிறகு அதிரடியை மீண்டும் தொடங்கிய சூா்யவன்ஷி, 47 பந்துகளில் 8 பவுண்டரிகள், 7 சிக்ஸா்களுடன் 96 ரன்களுக்கு, 18-ஆவது ஓவரில் ஆட்டமிழந்தாா். தொடா்ந்து டோனோவன் ஃபெரெய்ரா களம் புகுந்து விளாசினாா்.

ஓவா்கள் முடிவில், ஜடேஜா 5 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 45, ஃபெரெய்ரா 11 பந்துகளில் 2 பவுண்டரிகள், 4 சிக்ஸா்களுடன் 38 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தனா்.

20 ஓவா்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 214 ரன்கள் சோ்த்தது.

குஜராத் தரப்பில் ஹோல்டா், ஆா்ச்சா் ஆகியோா் தலா 2, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா ஆகியோா் தலா 1 விக்கெட் கைப்பற்றினா்.

அடுத்து குஜராத் 215 ரன்களை நோக்கி தனது இன்னிங்ஸை விளையாடியது. அணியின் கேப்டன் ஷுப்மன் கில் அதிரடியாக விளையாடி 53 பந்துகளில் 104 ரன்கள் அடித்தாா். தமிழக வீரா் சாய் சுதா்சன் 32 பந்துகளில் 58 ரன்கள் விளாசினாா். இறுதியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் 8 பந்துகள் மீதமிருந்த நிலையில் 219 ரன்கள் எடுத்து குஜராத் அணி வெற்றி பெற்றது.

Summary

Gujarat Titans defeat Rajasthan Royals finals with RCB

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.