மும்பை இந்தியன்ஸின் வீரர் திலக் வர்மா நடப்பு ஐபிஎல் சீசனில் நீண்ட தூரத்திற்கு சிக்ஸர் அடித்து சாதனை படைத்துள்ளார். 106 மீட்டருக்கு சிக்ஸர் அடித்த திலக் வர்மா டிம் டேவிட்டுடன் இந்த சாதனையை பகிர்ந்துகொண்டுள்ளார்.
நேற்றிரவு நடந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 200 ரன்கள் எடுக்க, மும்பை 19.5 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழந்து 205 ரன்கள் எடுத்து த்ரில் வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் திலக் வா்மா 33 பந்துகளில் 6 பவுண்டரிகள், 6 சிக்ஸா்களுடன் 75 ரன்கள் விளாசி, அணியை வெற்றிக்கு வழிநடத்தி ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இந்தப் போட்டியில் சஹால் வீசிய 15.1ஆவது ஓவரில் திலக் வர்மா 106 மீட்டருக்கு சிக்ஸர் அடித்து அசத்தினார். இந்த விடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
நடப்பு சீசனில் நீண்ட தூரம் சிக்ஸர் அடித்தவர்கள்
1. டிம் டேவிட் - 106 மீ.
2. டேவிட் மில்லர் - 106 மீ.
3. திலக் வர்மா - 106 மீ.
4. டோனவன் ஃபெரேரா - 105 மீ.
5. ஜேக்கப் பெத்தேல் - 104 மீ.
Summary
106 METRE SIX! Tilak Varma levels the longest six of the season with this hit
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









