திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

நடிகை ஸ்ரீலீலா - திலக் வர்மா காதலா?

நடிகை ஸ்ரீலீலா - திலக் வர்மா காதலிப்பதாக பரவும் தகவல் பற்றி...

News image

திலக் வர்மா, ஸ்ரீலீலா - ANI

Updated On :18 மே 2026, 12:18 pm IST

நடிகை ஸ்ரீலீலாவும் கிரிக்கெட் வீரர் திலக் வர்மாவும் டேட்டிங் செய்வதாக சமூக ஊடகங்களில் தகவல்கள் பரவி வருகின்றன.

தெலுங்கில் பகவந்த் கேசரி திரைப்படம் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த ஸ்ரீலீலா, தமிழில் பராசக்தி படத்தில் நடித்துள்ளார். தற்போது ஹிந்தியில் அனுராக் பாசு இயக்கும் படத்திலும், தமிழில் தனுஷ் 55 திரைப்படத்திலும் ஸ்ரீலீலா நடித்து வருகிறார்.

ஹைதராபாத்தைச் சேர்ந்த இந்திய கிரிக்கெட் வீரரான திலக் வர்மா, மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஐபிஎல் தொடரில் விளையாடி வருகிறார்.

இவர்கள் இருவரும் காதலிப்பதாகவும், டேட்டிங் செய்வதாகவும் ரெடிட் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் ரசிகர்கள் கருத்துகளை பரிமாறி வருகின்றனர்.

சமீபத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் வீரர்களின் குடும்பத்தினருக்கு ஒதுக்கப்பட்ட பகுதியில், ஸ்ரீலீலாவின் தாய் ஸ்வர்ணலதா அமர்ந்திருந்த புகைப்படங்களை சிலர் மேற்கோள்காட்டி, திலக் வர்மாவை ஸ்ரீலீலா காதலிப்பதன் அடிப்படையிலேயே அவரின் தாயாருக்கு அப்பகுதியில் இருக்கை ஒதுக்கப்பட்டதாக பதிவிட்டுள்ளனர்.

இதனிடையே, ஹோட்டலில் ஹெட்போனுடன் திலக் வர்மா நடந்துச் செல்லும்போது, ’இவர் காதலிக்கிறார்’ என்று சக வீரர் சூர்யகுமார் யாதவ் குறிப்பிடும் விடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

சிலர், மும்பை வான்கடே திடலில் நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியின்போது, திலக் வர்மா பெயர் பொறிக்கப்பட்ட இந்திய ஜெர்ஸி அணிந்த ஒருவருடன் ஸ்ரீலீலா பேசிக் கொண்டிருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.

இதுதொடர்பாக இருவரும் அதிகாரப்பூர்வமாக எவ்வித கருத்துகளையும் தெரிவிக்கவில்லை.

விராட் கோலி - அனுஷ்கா சர்மா, கே.எல். ராகுல் - அதியா ஷெட்டி ஜோடிகளுக்குப் பிறகு, திலக் வர்மா - ஸ்ரீலீலாவை டேட்டிங் செய்தியை ரசிகர்கள் வைரலாகப் பகிர்ந்து வருகிறார்கள்.

ஸ்ரீலீலா தாய் மறுப்பு

திலக் வர்மா - ஸ்ரீலீலா காதல் தொடர்பான செய்தியை ஸ்ரீலீலாவின் தாய் ஸ்வர்ணலதா மறுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இருவரும் காதலிக்கிறார்கள் என்ற செய்தி அடிப்படை ஆதாரமற்றது என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், திரைப்படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வரும் ஸ்ரீலீலா, ஓய்வு நேரங்களில் முதுநிலை நீட் தேர்வுக்காக தன்னை தயார்படுத்தி வருவதாகவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

ஸ்ரீலீலா, இளநிலை மருத்துவப் படிப்பை முடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Summary

Actress Sreeleela and Tilak Varma Dating rumours

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.