திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

திலக் வர்மா அரைசதம்; ஆர்சிபிக்கு 167 ரன்கள் இலக்கு!

ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் 7 விக்கெட்டுகளை இழந்து 166 ரன்கள் எடுத்துள்ளது.

News image

பந்தை சிக்ஸருக்கு விளாசும் திலக் வர்மா - படம் | ஐபிஎல் (எக்ஸ்)

Updated On :10 மே 2026, 10:03 pm IST

ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் 7 விக்கெட்டுகளை இழந்து 166 ரன்கள் எடுத்துள்ளது.

ஐபிஎல் தொடரில் ராய்பூரில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, மும்பை இந்தியன்ஸ் முதலில் விளையாடியது.

திலக் வர்மா அரைசதம்; ஆர்சிபிக்கு 167 ரன்கள் இலக்கு!

முதலில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 166 ரன்கள் எடுத்துள்ளது.

மும்பை இந்தியன்ஸ் அணியில் திலக் வர்மா அதிகபட்சமாக 42 பந்துகளில் 57 ரன்கள் எடுத்தார். அதில் 3 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, நமன் திர் 32 பந்துகளில் 47 ரன்கள் எடுத்தார். அதில் 5 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும். ரோஹித் சர்மா 22 ரன்களும், ராஜ் பவா 16 ரன்களும் எடுத்தனர்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு தரப்பில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய புவனேஷ்வர் குமார் 4 ஓவர்களில் 23 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். ஜோஷ் ஹேசில்வுட், ராஷிக் சலாம் தர் மற்றும் ரோமாரியோ ஷெப்பர்ட் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

167 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி விளையாடி வருகிறது.

Summary

Batting first in the IPL match against Royal Challengers Bangalore, Mumbai Indians scored 166 runs for the loss of 7 wickets.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.