ஐபிஎல் தொடரில் தில்லி கேபிடல்ஸுக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் 5 விக்கெட்டுகளை இழந்து 210 ரன்கள் எடுத்துள்ளது.
ஐபிஎல் தொடரில் தர்மசாலாவில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் தில்லி கேபிடல்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தில்லி கேபிடல்ஸ் பந்துவீச்சைத் தேர்வு செய்ய, பஞ்சாப் கிங்ஸ் முதலில் விளையாடியது.
பிரியான்ஷ் ஆர்யா, ஷ்ரேயாஸ் ஐயர் அரைசதம்; தில்லி கேபிடல்ஸுக்கு 211 ரன்கள் இலக்கு!
முதலில் விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 210 ரன்கள் எடுத்துள்ளது.
அந்த அணியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிரியான்ஷ் ஆர்யா மற்றும் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் அரைசதம் விளாசி அசத்தினர். அதிரடியாக விளையாடிய ஷ்ரேயாஸ் ஐயர் 36 பந்துகளில் 59 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். அதில் 5 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும். பிரியான்ஷ் ஆர்யா 33 பந்துகளில் 56 ரன்கள் எடுத்தார். அதில் 2 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்கள் அடங்கும். கூப்பர் கானலி 38 ரன்கள், சூர்யான்ஷ் ஷெட்ஜ் 21 ரன்கள், பிரப்சிம்ரன் சிங் 18 ரன்கள் எடுத்தனர்.
தில்லி கேபிடல்ஸ் தரப்பில் மிட்செல் ஸ்டார்க் மற்றும் மாதவ் திவாரி தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். முகேஷ் குமார் ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினார்.
211 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி தில்லி கேபிடல்ஸ் விளையாடி வருகிறது.
Summary
In the IPL match against the Delhi Capitals, the Punjab Kings, batting first, scored 210 runs for the loss of 5 wickets.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
ஷ்ரேயாஸ் ஐயர் அதிரடி சதம்: லக்னௌவை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!

ரியான் பராக், துருவ் ஜுரெல் அரைசதம்; தில்லி கேபிடல்ஸுக்கு 194 ரன்கள் இலக்கு!

வெங்கடேஷ் ஐயர், விராட் கோலி அரைசதம்; பஞ்சாப் கிங்ஸுக்கு 223 ரன்கள் இலக்கு!








