ஐபிஎல் தொடரில் பிளே ஆஃப் சுற்றுக்குக்கு முன்னேறுவதற்கான போட்டியிலிருந்து லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் வெளியேறின.
ஐபிஎல் தொடரில் நேற்று (மே 10) சென்னை சேப்பாக்கம் திடலில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியும், ராய்பூரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியும் நடைபெற்றது.
அதில், முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்திலும், இரண்டாவது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மும்பை இந்தியன்ஸை 2 விக்கெட்டுகள் வித்தியாசத்திலும் வீழ்த்தி அசத்தின.

ஐபிஎல் புள்ளிப்பட்டியல் - படம் | ஐபிஎல் (எக்ஸ்)
நேற்றையப் போட்டியில் தோல்வியடைந்தன் மூலம், லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறுவதற்கான போட்டியிலிருந்து வெளியேறின. இதுவரை தலா 11 போட்டிகளில் விளையாடியுள்ள லக்னௌ மற்றும் மும்பை அணிகள் தலா 3 வெற்றிகள் பெற்றுள்ளன. புள்ளிப்பட்டியலில் மும்பை இந்தியன்ஸ் 9-வது இடத்திலும், லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 10-வது இடத்திலும் உள்ளன.
பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறுவதற்கான போட்டியிலிருந்து லக்னௌ மற்றும் மும்பை அணிகள் வெளியேற்றப்பட்டுவிட்ட நிலையில், பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற மற்ற அணிகளுக்குள் கடும் போட்டி நிலவுவது குறிப்பிடத்தக்கது.
Summary
Lucknow Super Giants and Mumbai Indians have been eliminated from the race to advance to the playoffs in the IPL tournament.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய ராஜஸ்தான் ராயல்ஸ்; பஞ்சாப் கிங்ஸ், கேகேஆர் வெளியேறின!

பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற எங்களுக்கு இன்னும் வாய்ப்பிருக்கிறது: சிஎஸ்கே பயிற்சியாளர்

லக்னௌவுக்கு எதிராக சிஎஸ்கே பேட்டிங்; பிளேயிங் லெவனில் ஸ்பென்சர் ஜான்சன்!








