ஐபிஎல் 2026 தொடரில் ஃபீல்டிங்கில் அசத்திய சிஎஸ்கே வீரர் டெவால்டு பிரெவிஸ் அதிக கேட்ச்களை தவறவிடாமல் பிடித்து முதலிடம் பிடித்துள்ளார். சிஎஸ்கே அணி மோசமான ஃபீல்டிங் செய்தாலும் இவர் சிறப்பாக செயல்பட்டுள்ளார்.
கீப்பர் அல்லாத ஃபீல்டர்களில் டெவால்டு பிரெவிஸ் 11 கேட்ச்களுடன் முதலிடம் பிடித்துள்ளார். கீப்பர்கள் வரிசையில் துருவ் ஜுரெல், ஜாஸ் பட்லர் 14 கேட்ச்களுடன் முதலிடத்தைப் பகிர்ந்துகொண்டுள்ளனர்.
நடப்பு சீசனில் அனைத்து அணிகளுமே அதிகமாக ஃபீல்டிங்கில் சொதப்பி வருகின்றன. அதேபோல் சிஎஸ்கே அணியும் அதிக கேட்சகளை தவறவிட்டுள்ளன. குறிப்பாக ஷிவம் துபே அதிகமான வாய்ப்புகளை தவறவிட்டார்.
கடைசி போட்டியில் இதனால் ஷிவம் துபே இம்பாக்ட் வீரராக மாற்றப்பட்டார். பஞ்சாப் அணி இந்தக் குறையினால் பல போட்டிகளில் தோல்வியுற்றுள்ளது.
டெவால்ட் பிரெவிஸ் காயம் காரணமாக முதல் சில போட்டிகளில் விளையாடவில்லை. குறைவான போட்டிகளிலேயே அதிக கேட்ச்களால் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார்.
ஐபிஎல் 2026: அதிக கேட்ச்கள் எடுத்தவர்கள் பட்டியல்
1. டெவால்டு பிரெவிஸ் (சிஎஸ்கே) - 11 கேட்ச்கள் (7 போட்டிகளில்)
2. தேவ்தத் படிக்கல் (ஆர்சிபி) - 10 கேட்ச்கள் (10 போட்டிகளில்)
3. ஹென்ரிச் கிளாசன் (சன்ரைசர்ஸ்) - 10 கேட்ச்கள் (11 போட்டிகளில்)
4. ஜேவியர் பார்ட்லெட் (பஞ்சாப்) - 9 கேட்ச்கள் (8 போட்டிகளில்)
5. ரிங்கு சிங் (கேகேஆர்) - 9 கேட்ச்கள் (10 போட்டிகளில்)
6. க்ளென் பிலிப்ஸ் (குஜராத்) - 8 கேட்ச்கள் (6 போட்டிகளில்)
Summary
Most catches as a fielder in IPL 2026 - Dewald brevis
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஐபிஎல் கோப்பை வென்ற விராட் கோலிக்கு கால்பந்து வீரர் ஹாரி கேன் வாழ்த்து!
நம்பிக்கை, அதீத நம்பிக்கை... டெவால்டு பிரெவிஸுக்கு எம்.எஸ். தோனி பகிர்ந்த அறிவுரை!

சொதப்பும் டெவால்டு பிரெவிஸ்..! கடந்த சீசனைவிட 50% குறைவான ரன்கள்!







