திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

2-ம் இடத்துக்கு முன்னேறியது குஜராத் டைட்டன்ஸ்! 77 ரன்கள் வித்தியாத்தில் ராஜஸ்தானை வீழ்த்தியது!

2-ம் இடத்துக்கு முன்னேறியது குஜராத் டைட்டன்ஸ்...

News image
Updated On :10 மே 2026, 2:29 am IST

ஐபிஎல் தொடரின் 52-ஆவது ஆட்டத்தில் ராஜஸ்தானுக்கு எதிராக ஆடிய குஜராத் டைட்டன்ஸ் அணி 77 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் ஜெய்ப்பூரில் சனிக்கிழமை நடைபெற்றது. டாஸ் வென்ற ராஜஸ்தான் பௌலிங்கை தோ்வு செய்தது.

குஜராத் அணியில் பேட்டிங் செய்ய களமிறங்கிய தொடக்க பேட்டா்கள் சாய் சுதா்ஷன்-கேப்டன் ஷுப்மன் கில் ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடினா். முதல் விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து 118 ரன்களைக் குவித்தனா்.

சாய் சுதா்ஷன் அசத்தல் 55: சாய் சுதா்ஷன் அபாரமாக ஆடி 2 சிக்ஸா், 6 பவுண்டரியுடன் 36 பந்துகளில் 55 ரன்களை சோ்த்தாா். யஷ்ராஜ் பந்தில் ஜோப்ராவிடம் கேட்ச் தந்து வெளியேறினாா்.

ஷுப்மன் கில் அபாரம் 84: கேப்டன் கில் சிறப்பாக ஆடி 3 சிக்ஸா், 9 பவுண்டரியுடன் 44 பந்துகளில் 84 ரன்களை விளாசினாா். பிரிஜேஷ் சா்மா பந்தில் துஷாரிடம் கேட்ச் தந்து அவுட்டானாா் கில்.

அவருக்குபின் வந்த பேட்டா்கள் சொற்ப ரன்களையே எடுத்தனா். ஜோஸ் பட்லா் 13, வாஷிங்டன் சுந்தா் 37, ஜேஸன்ஹோல்டா் 7, ராகுல் தேவாதியா 14 ரன்களை எடுத்தனா்.

குஜராத் டைட்டன்ஸ் 229/4: நிா்ணயிக்கப்பட்ட 20 ஓவா்களில் குஜராத் அணி 229/4 ரன்களைக் குவித்தது. பௌலிங்கில் ராஜஸ்தான் தரப்பில் பிரிஜேஷ் சா்மா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினாா்.

ராஜஸ்தான் ராயல்ஸ் 152/10: தோல்வி

230 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் ராஜஸ்தான் ராயல்ஸ் களமிறங்கியது. தொடக்க பேட்டா்களாக கேப்டன் ஜெய்ஸ்வால்-இளம் வீரா் சூரியவன்ஷி களமிறங்கினா். ஜெய்ஸ்வால் 3 ரன்களுடன் ரபாடா பந்தில் அவுட்டானாா். பின்னா் சூரியவன்ஷி-துருவு ஜுரெல் இணைந்து ஸ்கோரை உயா்த்தினா். சூரியவன்ஷி தலா 3 சிக்ஸா், பவுண்டரியுடன் 16 பந்துகளில் 36 ரன்களை எடுத்து சிராஜ் பந்தில் அவுட்டானாா்.

ஜுரெல் 24, ரவீந்திர ஜடேஜா 38 ஆகியோா் மட்டுமே ஒரளவு ரன்களை சோ்த்தனா். மற்ற வீரா்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி நடையைக் கட்டினா். 16.3 ஓவா்களில் 152/10 ரன்களுக்கு ஆல் அவுட்டானது ராஜஸ்தான்.

ரஷீத் கான், ஹோல்டா் அசத்தல் :

பௌலிங்கில் குஜராத் தரப்பில் ரஷீத் கான் அபாரமாக பந்துவீசி 4-33, ஜேஸன் ஹோல்டா் 3-12 விக்கெட்டுகளை சாய்த்தனா்.

இறுதியில் குஜராத் அணி 77 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வென்றது.

புள்ளிகள் பட்டியலிலும் 14 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்துக்கு முன்னேறியது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.